Hina Softwares, Kattumannarkoil

Well Equipped Lab



All Departments have Laboratories/ Workshops as per AICTE stipulations and Curriculum of the University. These are well established with modern Facilities, Equipments and Systems. Our Labs are regularly updated and upgraded to cater to the students' needs.
[Read More...]


Central Library having more than 1 Lakh Books



Our College Library is well equipped with more number of Books, National and International Journals. For effective Teaching learning process, the library is maintaining a special section which is incorporated with Educational CD’s and DVD’s in fields of Engineering, Management and Science and Humanities. The Library takes more efforts in adding more volumes of books and journals every year to quench the thirst of our staff & students.

Open access system is adopted to avail the maximum utilization of the Library resources. To benefit the students, Digital Library is installed, which helps them in utilizing the library more effectively. Library transactions are maintained by Integrated Library Management Software package with Bar-coding provisions.

Online Public Access Catalogue (OPAC) facility is available to save the access time of the users. We have DELNET membership for the library which provides e-journals every month.The library department is manned by the following staff who are highly qualified and experienced.

Rules & Regulations

    Library remains open from Monday to Saturday from 9.30 am to 5.30 pm on all college working days.
    All staff / students are required to sign in the library register while entering the library
    All UG, PG students and staff members are eligible to be enrolled as members of the library
    Each student will be issued 4 – library tickets and staff will be issued 5 - library tickets which are not transferable. And each university Rank holder will be issued extra 2 – special library tickets.
    Books issued can normally be retained for a period of 15 days by the students and one month by the staff
    Dictionary, Reference books, Dissertation, Periodicals and News papers will not be lent out
    For loss of the books the borrower has to replace the books
    Use of cell phones inside the library is prohibited
[Read More...]


Transit More than 80 Buses



Transportation, Training and Placement

    The College provides opportunities for pre-final and final year students to attend campus interviews conducted by various leading companies.
    Provides in-plant training to the students during their summer and winter vacations.
    Preparing students to take-up the aptitude tests, face the interviews and group discussions.
    The English Department trains the students to prepare their curriculum vitae, conducts Enhancement program right for the First year of their course to develop communication Skills.
    We believe in the real world business environment and we regularly invite experts from Different functional areas from both academic and industries to deliver Guest Lectures.
[Read More...]


Singapore Short Stories - Amazon Kindle



சிங்கப்பூர் சிறுகதைகள்









காட்டுமன்னார்கோயில்

செந்தில்குமரன்










Copy Right@2017 Hina Softwares


பொருளடக்கம்

1.அதுவே தான் எல்லாம்

2.நாலுசீட்டு – ஜாக்பாட்

3.ஏத்திவிடு

4.லிட்டில் இந்தியா என்னும் தேக்கா

நண்பா

சொகுசு வாழ்க்கை

மரம்

அங்கிள்

எம்மவ

வெளிச்சமில்லா விளக்கு

(என் கவிதை-சிங்கப்பூர் கடற்கரை கவியரங்கத்தில் முதல் பரிசு பெற்றது )

5.எட்டாம்பு

6.இனிக்கும் இலக்கியம்

7.சிங்கப்பூர் சிங்டெல் நிறுவனத்தின் 3GL கைபேசிக்காக நான் எழுதிய 'டெல்' திரைக்கதை

8.குருவி

9.விஸா







1.அதுவே தான் எல்லாம்


சிங்கப்பூர், குட்டி இந்தியா நிலையம் விட்டு வெளியே வந்தபோது தூறிக்கொண்டிருந்தது, தார்ப்பாய்களுக்குள் காய்கறிகளும், பழங்களும் நனைந்திருந்தன, தேக்காவில் ஒரு காபி ஓ-வுக்காக போய்க்கொண்டிருந்தேன், தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் அட்டையை செருகி தட்டியதும் நீலத் தாள்கள் கைகளில் படபடக்க, சட்டைப்பையில் வைக்கவில்லை, அதற்குள் நெடுநெடுவென ஒல்லியான ஆள் வந்து நின்றான்.

'போலாமா சார்!'

'எங்கப்பா?'

'அன்பு தானே நீங்க?'

'ஆமாம்!' என்று இழுத்தேன், அடுத்த மழைக்கு அனைவரும் பதுங்க ஓடினார்கள்

வாடகை காரை கை காண்பித்தான், சீன ஓட்டுநர் ஒற்றைக் காதில் கைய்யடக்கத்தை கொடுத்திருந்தார், எடுத்துவிட்டு 'எங்கே?' என்றார், அவன் சொல்லிவிட்டு முன் சீட்டில் அமர்ந்துகொண்டான், பின்புறம் ஏறிக்கொண்டேன், கெர்பா சமீபம் வண்டி நின்றது, ஒருத்தி ஏறி என் அருகில் அடக்கமாக உட்கார்ந்துக் கொண்டு என்னை வாசனைப் பார்த்தாள், வயது இருபத்தஞ்சுக்கும் இருபத்தேழுக்கும் நடுவில் இருக்கலாம், மாங்காமாலை,தொங்கட்டான், ஒற்றை மூக்குத்தி, தோளில் ஒரு தோல்பை, முன்னம் முடிகள் சுருள் சுருளாக கண்ணம் வழிந்தது, இறக்கி கட்டிய நைலக்ஸ் புடவை, யு கழுத்து, சந்தனபொட்டுக்கு அருகில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு, அக்குளில் கொஞ்சம் வியர்வை, சரி கதைக்கு வருகிறேன்,

'நைனா ஆளா நீ?' கேட்டாள்.

'ஆமாம்' - வண்டி முஸ்தபா தாண்டி ஒதுக்குப்புறமாய் நின்றது இறங்கினோம், என்னை அழைத்தவன் ஒன்றும் பேசாமல் இறங்கி விடு விடுவென நடந்துபோனான், ஒரு போலிஸ் கார் விர்ரென்று பாய்ந்து போனது, பணம் தந்தேன், இறங்கினோம்

'நாஸ்த்தா கட்டிக்கலாமா துரை!'

'எதுக்கு?'

'அப்புறம் ஒரு தபா ஒடியார முடியாது பாரு, எனக்கு ஒரு பாயாவும், அம்பது சென்டுக்கு சோறும் வாங்கிக்க போதும், மணி பத்தரை ஆவுது, குடிக்க எதாச்சும் வாங்கிக்க, எனக்கு ஹாட்டு வேணாம்'

இருபதுக்கு இருபது அறையில் அலங்கோலமான படுக்கையும், தட்டுமுட்டு சாமான்களும், நேற்று இரவின் குடித்த பியர் போத்தால்களும், மீ-கூரிங்கின் எறும்புகளும், சில சிகரெட் துண்டுகளும் இறைந்திருந்தன, அவள் ஒரு துண்டு எடுத்து உதறி பெருக்கி

'நீ குந்து துரை, வந்துடறன்', என்று பாத்ரூம் கதவு சாத்திக்கொண்டாள், உள்ளே குழாய் சத்தத்தில் அவளின் 'மயிலிறகே..' பாடிக்கொண்டே குளிக்கிறாள், தரையில் விரித்திருந்த படுக்கையில் இறைந்து கிடந்த மல்லிகை உதிரிகளை தள்ளி விட்டு உட்கார்ந்தேன், அருகில் ஏதோவொரு மன்மதக்கலை மூணு வெள்ளி புத்தகம், தேக்கா உபயம், தலைகானியிலிருந்து எட்டிப்பார்த்தது

பத்து சதவீத உடையில் வெளியே வந்தாள், வாசனை அடித்தது, புது ஷாம்பு மணம்

'வண்ட்டன் துரை, போரடிக்குதா!, புக்குப் பாரு!'

மெலிதான ஒரு நைட்டியில் தலையை முடிந்துகொண்டாள், சைடு ஊக்கின் இரண்டு பக்கமும் கைபையில் வைத்திருந்த இரண்டு முழ மல்லிகை பூவை வைத்துக்கொண்டு ஒன் மேன் ஷோவை ஈஷிக்கொண்டு என்னிடம் கேட்டாள்

'புதுசா?'

'ஏன்?'

'புதுசான்னுக் கேட்டேன்'

'ஆமாம்'

'ஒன்னுஞ் செஞ்சடமாட்டன், சின்ன பைய்யனா இருக்க', என் தலையை கலைத்துவிட்டு, கலுக்கென்று சிரித்துவிட்டு லிப்ஸ்டிக், அப்புறம் ஒரு பாடலின் முணுமுணுப்பு, குட்டிக்குறா பவுடர், அப்புறம் சாமி படம் முன் கண் மூடி ஒரு நிமிடம் நின்றாள்

'நீ சாமியெல்லாம் வைச்சிருக்க'

'எனக்கு நஞ்சானும் குஞ்சானுமா இரண்டு புள்ள துரை, ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்துருக்கன், அதுக்கோசரம் தான் இந்த பொழப்பு'

'வீட்டு வேலைக்கு போவலாமே!'

'இருந்தன் துரை, மூணு இடத்துல இருந்து பாத்தேன், பொறம்போக்கு சீவணம் வாத்யாரே, முப்பதாயிரம் கட்டிட்டு வந்தேன், ஆறு மாசம் ஆச்சு போட்ட மொதுல கையில பார்க்க, இதில ஆயிரம் நொட்னம், சோறு குழம்பு வைக்கலாம், துணிமணி துவைச்சிப்போடலாம், அலம்பி விட சொல்றாளுங்க துரை

அந்த நாரப் பொழப்புக்கு தேவிடியாத்தனம் பெட்டர்னு பூந்துட்டன், எனக்கு என்னா குறை துரை, சாவரக் கட்டை தானே'

'போலிஸ் ரெய்டு பண்ணா என்னாறது'

'அட நீ வேற, அதெல்லாம் இரண்டு தடவை ரெவ்வெண்டு மாசம் டேஷன் பாத்துட்டன், அவுத்துப்போட்டு எக்ஸஸைஸ் பண்ணியாச்சு, மூவாயிரம் தூக்கிப்போட்டா ஊர்ல புது பாஸ்போர்ட்டு, அம்சாவோ, அஞ்சலையோ பேர் மாத்தி இறங்கிட வேண்டியது தான், துட்டு சாமி துட்டு'

'என்னை கூட்டி வந்தாரே அவர் யாரு?'

'அதுவா, என் ஆம்படையான்' சிரித்தாள்

'நெஜம்மாவா'

'ம், அந்த கசனாரிப்பயளுக்கு மூணு பொண்டாட்டி, என்னை இங்க விட்டு சம்பாரிக்கிறான், இவன் இங்க கிடந்த ஏஜெண்டு பய தான், வந்த புதுசில இப்ப இருக்கற மாதிரி தாட்டியா இருக்கமாட்டேன், பூசனமாதிரி ஒல்லிசா வெட்டுக்கிளியாட்டம் இருப்பேன், பாத்த கண்ணு பத்திக்கும், சுராங்கு ஈஸ்டு இல்ல முரு(க)வன் கோயிலு, அங்க வச்சு தான் தாலி கட்டுணான், தொங்க தொங்க தாலியக் கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ண ஆரம்பிச்சன், ஒரு மாசந்தான் வாத்யாரே, எல்லா இடத்தையும் சுத்தி காமிச்சான், கேஎப்சி யில சிக்கன்லாம் வாங்கித்தருவான், சத்தியமா சொல்றன் துரை, கெர்பா ஓட்டலோ, கெல்லாங்கோ இருக்கற இடம் கூட அப்பல்லாம் எனக்கு தெரியாது, இட்டுக்கிட்டு போனான், பீர் வாங்கி கொடுத்தான், இது தாண்டி நீ நிரந்தரமா தொழில் பன்னவேண்டிய இடம்னு ரோட்ல உட்டுட்டான், தினம் நூறு வெள்ளி தராட்டி செருப்பாலியே மாங்கு மாங்குன்னு சாத்துவான், நீ சாப்ட்டியா?'

'ம்'

'செட்டிங்பார்ட்டி வந்தானுங்கன்னா கூடவே மீனு மண்டை கொண்டாருவானுங்க'

'அது யாரு?'

'உண்டியல் பார்ட்டிங்க, பத்து வெள்ளி கூடத்தர்ர மவராசனுங்க'

அவள் என் அருகில் வந்து உட்கார்ந்துக்கொண்டாள்

'எஸ் பாஸா'

'இல்ல பிஸினஸ்'

'கல்யாணம் கட்டிட்டியா இல்லியா?'

'இல்ல'

'காலங்காலத்துல கண்ணி கழிச்சிக்க, சொல்லனும்னு இல்ல சொல்றன், குள்ளமா இருக்கறதுல உன் வயசு தெரியல, அடிக்கடி இப்படி வந்தேன்னா நல்லாருக்காது, போவாதவக்கிட்ட போயிட்டன்னா பத்து பைசாவுக்கு பேரமாட்ட, நீத்துப்பூடுவ'

'இது தான் முதல் தடவை'

'அடிங், வர்ர எல்லாத்துக்கும் ஒரே பதிலை தான் பேசி வைச்சிக்கினு தான் வருவீங்களா மைனருங்களா!' என் கண்ணம் கிள்ளி சிரித்தாள்

'இல்ல உண்மை தான்'

என் அருகில் அமர்ந்திருந்தவள் பொட்டென என் மடியில் சாய்ந்தாள், அவள் முதுகு தட்டி கண்கள் திறந்து கேட்பதற்குள் மயக்கமானாள், அருகில் வைத்திருந்த குளிர்பாணம் எடுத்து முகத்தில் அடித்தேன், கண் திறந்தாள்.

'என்னாச்சு!'

'இப்படிதான் எப்பனாச்சும் சுத்தும்' என்று ஈனசுரத்தில் பேசினாள்

'ஆஸ்பத்திரி போலாமா!'

'வேணாந் துரை, நீ ஒண்ணு பண்ணு, அப்படியே விட்டுட்டு நீ போ, எனக்கு தானா சரியாயிடும், நாளைக்கா வா, இது தான் என் நம்பரு, அடி'

'இதப்பார் போய் ஒரு ஊசி போட்டுட்டு வந்துடலாம், கிளம்பு'

'துரை, காசு என்னா துரை, மனுஷன், நீ மனுஷன் துரை, நல்லபடியா நாலு வார்த்தை பேசற, வர்ர நாதாரி மவனுங்க அவுத்துப் போடுடின்னு ஆட்டத்துக்கு நிப்பானுங்க, அம்பது வெள்ளிக்கு சாவடிச்சுடுவானுங்க துரை, நீ மனுஷன் துரை'

அவள் கண்ணிலிருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது.

'எப்பல்லாம் இப்படி?' அவள் கண்ணம் தட்டினேன்

'கொஞ்ச நாளா தான்!'

'கொஞ்ச நாள்னா?'

'ஒரு ஆறு மாசமா தான் துரை, திங்கற சோறு வவுத்துல ஒட்டமாட்டங்குது, சாயங்காலம் ஆச்சுன்னா போதும் சுரம் அடிக்க ஆரம்பிச்சிடும், பொட்டுன்னு அரை பாட்டில் ரம்முல நாலு மாத்திரை போடுவேன், காணாமல் போயிடும், என் புருஷன் என்னை கண்டுக்கல, அவனுக்கு பொறந்ததுங்க இல்லை என் புள்ளைங்க, அதனால அவனுக்கு ஆசை எட்டிக்கா, என் கும்பி கொதிக்குது துரை, அதுகளை அநாதியா விட்டுட்டு வந்து இந்த ஈனத்தொழிலு பண்றது, எனக்கு சாவு நல்ல சாவு இல்ல துரை'

'அப்படி சொல்லாதே, சரிப் பண்ணிடலாம்'

'உன் வாயில சக்கர போடணும் துரை, நீ உத்தமன் துரை, எவ்வளவு பாசமா பேசற'

அவள் காட்டிய மேசையிலிருந்து இரண்டு மூண்று ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தேன், அவள் ரம்மில் விழுங்கினாள், அப்படியே என் மடியில் கிடந்தாள்

அவளை அனைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றேன்,

இரத்த பரிசோதனை, வைடால் பரிசோதனை எல்லாம் எடுத்து அவளை அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவந்து விட்டு சூடாக டீ வாங்கித்தந்தேன்.

'என்னா துரை சொல்றாங்க?' குரலில் அதிர்ச்சி தெரிந்தது

'கொஞ்சம் பொருத்து ரிப்போர்ட் பாத்துட்டு தான் சொல்வாங்க, உனக்கு ஒன்னும் இல்ல'

'என்னன்னு?'

'சாயங்காலம் தானே ஜுரம் அடிக்கிறதா சொன்ன, ஜன்னியா, டெங்குவான்னு தெரிஞ்சுடும்'

'துரை!'

'சொல்லு!'

'எனக்கு என்னாச்சும் ஒன்னுன்னா எம் புள்ளைங்க நடுத்தெருவுல நின்னுடும் துரை, அதுகளுக்கு எடுத்துக்கட்டி செய்ய ஆளுபாது இல்ல, என் ஆத்தாக்காரி அறுத்து விட்டுடுவா, நான் அனுப்பி வைக்கிற பணத்துல தான் தண்ணி ஊத்தறா, மாமன் மச்சான் தோளான் தொப்புடியான்னு ஒரு பய எடுத்துக்கட்டி செய்யமாட்டான், அதுவோளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாத்துடனும், நான் செத்துடுவனா துரை!' அழுதால்.

'ச்ச....ச்ச'

'செத்தாலும், உன்னை மாதிரி ஒரு மனுஷன் கிடைக்கமாட்டான் துரை, போதும் துரை, என் புள்ளைங்க மூஞ்சிய பாத்துக்கிட்டு இனி கிடந்துடுவன் துரை, உசுரு மேல பயம் வந்துடுச்சி துரை, நீ சாமி, என்னை கொண்டாந்து சேத்த பாரு, அதான்'

உள்ளே அழைத்தார்கள்

அவளை ஒரு ஓரமாக வெளியே உட்கார சொல்லிவிட்டு உள்ளே சென்றேன், ரிப்போர்ட்டுகளை வாங்கினேன், பணம் கட்டிவிட்டு வெளியே வந்தேன், வரும்போதே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

'ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு நான் கூட பயந்துட்டன்'

'என்னா சொல்ற துரை?'

'உனக்கு பிரஷர் இருக்கு, சக்கரை ஜாஸ்தியா இருக்கு, அப்ப அப்ப நீ உடம்பை காட்டியிருக்கனும், டேபிளட் எடுத்துக்க, சரியா' அவளிடம் மாத்திரை அட்டைகளை கொடுத்து காலை மாலை என்று வேளாவேளைக்கு பிரித்துக் கொடுத்தேன்

'ரொம்ப தேங்ஸ் துரை!'

'உன் பேர் என்ன?'

'பாஸ்போர்ட்டுல இருக்கறத கேக்கறியா, மெய்யாலுமே கேக்கறியா?'

'ஏதோ ஒன்னு சொல்லு'

'சரி, அம்புரோஸ், ரோஸுன்னு கூப்புடு'

'ரோஸ், நீ ஊருக்கு போறதுதான் நல்லது!'

'ஏன் துரை, எதாவது சொல்லிட்டாங்களா?'

'அது இல்ல, உனக்கு உடம்பு சரியாயில்ல, இப்படி அடிக்கடி நடந்தா உன்னை யார் பாத்துப்பா, நீ உன் பிள்ளைங்களுக்கு ஆதரவு இல்லேன்னும் சொல்ற, பேசாம ஊருக்குப் போ, உடம்பை காட்டிக்க, இதில எழுதியிருக்கிற மாத்திரைகளை தவறாம எடுத்துக்க, புரியுதா?'

'அதெல்லாம் சரி துரை, எனக்கு ஒன்னும் இல்ல இல்ல!'

'இருந்தா சொல்லமாட்டனா!, ஊருக்குப் போறியா!'

'கொஞ்சம் கடன் இருக்கு, அடைச்சிட்டு போயிற்றனே!'

'காசு எப்பவேனா சம்பாரிக்கலாம், முதல்ல உடம்பை பத்துக்க'

'ஆமாம் துரை!, இந்த நாசமத்த பயலுவோல்ட்ட சந்தி சிரிச்சி சின்னாபின்னமாவறதை விட இனி நானாச்சு நாலு முழ கவுறாச்சு, எல்லாத்தையும் பாத்துட்டன், ஒரு நாளைக்கு எத்தினியோ சம்பாரிச்சிட்டன், தண்ணி காசு தண்ணியோட போவுன்ற மாதிரி, இந்த கருமாந்தர காசு கதியத்து தான் போவும், போலிஸும் இனிமே புடிச்சா மொத்தமா மொட்டையடிச்சி வருஷக்கணக்குல போட்டுடுவாங்க, நாளைக்கு ஆத்தாக்காரியாட்டம் தெருவுல நின்னு போற வர்ரவனை பாக்கக்ககூடாது எம்பொண்ணுங்க, படிக்க வைக்கணும், ஒரு டீச்சர் ட்ரெயினிங்காவது சேத்துடனும், பெரியவ கெட்டிக்காரி, போல்(லி)ஸாக்கனும் துரை'

அன்புரோஸை ஒரு வாடகை டாக்ஸி பிடித்து கை செலவுக்கு பணம் கொடுத்து ஏற்றிவிட்டேன்

'எனக்கு ஒன்னும் இல்ல இல்ல!'

'உன் மேல சத்தியம், இருந்தா இப்படியெல்லாம் உங்கிட்ட பேசிக்கிட்டு இருப்பனா, கதவை நல்லா சாத்திக்க'

'டிரைவர், ஒன் மினிட், சாரி'

அவள் காரை விட்டு வெளியே வந்து என்னிடம் சொன்னாள்

'இப்ப சந்தோஷமா இருக்கேன் துரை, உன்னை நம்பறன் நான், ஏன் மூஞ்சை உம்முன்னு வைச்சிருக்க'

'ஒன்னும் இல்ல!'

'சிரி துரை, சிரி, நீயும் சிரி, நாணும் சிரிக்கிறன், அதுவே தான் எல்லாம்'

'ஆமாம்!' என்றேன்

அவள் கார் என் கண்களை விட்டு மறைந்தது

வைடால் டெஸ்ட் பாஸிட்டிவ், அன்புரோஸுக்கு எயிட்ஸ், இதை யாரிடம் போய் சொல்வேன்,



2.நாலுசீட்டு – ஜாக்பாட்


ஒரு பையன் சார், தம்மாத்தோண்டு ராஸ்கள், நினைச்சாவே நடுக்கம் வரவழைச்ச கிராதகன், அவனால தான், இல்ல அதனால் தான் என் வாழ்க்கையே கிழிங்சி போச்சு.

இருக்கிற ரோபாட்டையெல்லாம் சுட்டுத் தள்ளலாம்னு ஒரு முடிவோட துப்பாக்கி ஒண்ணுக்கூட ஏற்பாடு பண்ணிட்டேன், என் வீடும் பத்தாததுக்கு எனக்கு வேலை போன விஷயம் கேள்விபட்டதும் தாம்தூம்னு குதிக்க ஆரம்பிச்சுட்டுது.

சிங்கப்பூர், நான்யாங் பல்கலையில் அப்பா லேப் உதவியாளரா இருந்தார், படிப்பு அட்டாமிக் பிசிக்ஸ்ல இரண்டு டாக்டரேட், அம்மாவுக்கு ஆம்பளைங்களை கண்டாவே ஆகாது, அவங்க கைனோகாலஜிஸ்ட், பொம்மனாட்டி தானா தனக்கு சுரக்கிர விஷயத்தை வைச்சே கருத்தரிக்கிற பார்முலாவை கண்டுபிடிச்சி அதுமட்டும் அரசாங்கத்தோட ஒட்டிக்கிட்டு இருக்கு, தாத்தா அந்த காலத்துல யாரோ ரஜினியாம் அவர் ரசிகராம், இன்னும் பட்டம் விட்டுக்கிட்டு ஊரை சுத்தரார், பாட்டி ஒரு பியூட்டி பார்லர்ல டவுன் கெமிஷ்ட், அப்படின்னா கூட்ர பெருக்கிற ரோபாட்டுக்கு தினம் ஷெட்யூல் போட்ற வேலை, என் மனைவி ரேவதின்ற கிராதகி பிள்ளை பெத்துக்க இந்தியா போயிருக்கா

என்னை பற்றி சொல்ல இப்ப ஒன்னும் இல்ல, முப்பது வயசுலையே அரசாங்கம் என்னை வீட்டுக்கு அனுப்பிட்டுது, என் ரோபோ, சைபர்நாட்டிக் அறிவு அவ்வளவு தான் போல இருக்கு, இனிமே இந்த உலகத்துல எந்த மூலையிலேயும் நான் வேலைக்கு போகமுடியாது, உலகமே ஒரு தெருவாயிட்டுது, எங்க எது நடந்தாலும் எல்லாரும் எட்டிப்பாப்பாங்க, எல்லாத்துக்கும் இங்க கம்ப்யூட்டரை பழக்கி வைச்சிருக்காங்க,

கம்ப்யூட்டர் தவிர வேற எனக்கு என்ன தெரியும்னு யோசிச்சேன், எதுவும் தகையில, ஏதாவது சம்பாதித்து ஆகவேண்டும், ஒன்றும் அகப்படவில்லை, சரி சினிமாவில் எதாவது செய்யலாம் என்று என் அப்பாவின் விருப்பத்தை கேட்டுப்பார்த்தேன்

'எல்லாம் தான் வந்துட்டுதே, சினிமாக்கூட கதாநாயகி செண்ட் அடிச்சிக்கிட்டு வந்துருக்கிறான்னு தியேட்டர்க்குள்ள செண்ட் வாசணை அடிக்க விடறாங்க, கொலையின்னா இரத்த வாசனை, ஒரிஜினல் மீ-கூரிங் வாசனை தியேட்டர்ல தான் கிடைக்குது, 4D அனிமேஷன் சக்கை போடு போடுது, வேற என்ன செய்யப்போற?'

'கம்ப்யூட்டர்ல எதாவது பண்ணலாம்ப்பா!'

'சரியாப் போச்சு, திரும்பவும் ஏண்டா அந்த பித்து உனக்கு?'

'இது ஒருவகையில் ரீஎஞ்சினியரிங், நமக்கெல்லாம் தண்ணி காட்டற இந்த பாடாவதிகளுக்கு பாடல் கத்துக்கொடுக்காம இருக்ககூடாது, அதனால ஒரு யோசனை, மாமா ஒருத்தர் ஆர்க்கிடெக்டா இருந்தாரே அவர் கூட சேர்ந்து எதாவது பண்ணலாம்னு..'

'இல்லடா அவனுக்கு விஸா கிடைச்சிட்டுது'

'இப்ப கிபி 2036, யாருக்கும் தான் விஸா கிடையாதே, டிக்கெட் மட்டும் தானே!'

'அமெரிக்கா, லண்டன்னு இருந்து பார்த்தான், இரண்டு தடவை இருக்கிற டாலரை கொட்டி முயற்சி பண்ணான், ஏதோ கன்ஸ்ட்ரக்ஷன் வேலையாம் நிலாவுல, சம்பளம் ஈரோவுல எவ்வளவோ சொன்னான், அது சரி நீ என்ன பண்ணப் போற?'

'ஆராய்ச்சிக்கூடம்!'

'உன்னை மாதிரி பசங்களுக்கு வேற ஒன்னும் தெரியாதா?'

'ரோபோவுக்கு அடுத்த ஜெனரேஷன் வந்துட்டுது, அதில இறங்கலாம்னு பார்க்கறேன்'

'அதென்னடாது, அடுத்த ஜெனரெஷன்?'

'இது சஸ்பென்ஸ்!, உன்னை பத்தி எனக்கு நல்லாத் தெரியும், கொஞ்சமா கயிறுவிட்டு விஷயத்தை கறந்துடுவ, அப்புறம் இதே நான்யாங்ல தீஸீஸ் சப்மிட் பண்ணி அரசாங்கத்தோட ஒட்டிக்க பார்ப்ப'

'இல்லடா, அது இல்லடா' அவர் சிரித்துக்கொண்டார்

சிட்டிஹால் பக்கத்தில் ஒரு இடம் பிடித்து தெரிந்த கடவுள்களையெல்லாம் நமஸ்காரம் செய்துவிட்டு இருக்கிற காசில் அமோகமாக ஒரு ஆராய்ச்சிகூடம் ஆரம்பித்துவிட்டேன், கூடமாட ஒத்தாசைக்கு ஒரு நல்ல பையன் இருந்தால் தேவலையென்று என் கையடக்க பிஸியில் ஒரு விளம்பரம் தந்தேன், காலையில் 'பையன் தேவை' என்று விளம்பரம் தந்ததும் பொசுக்கென்று மாலையிலேயே ஒருத்தன் என் முன் வந்து நின்றான்

'ஆரம்பித்துவிட்டது எனக்கு ஏழரை!', இதை ஒரு பேனர் எழுத்து அளவுக்கு பெரிசாக படித்துக்கொள்ளுங்கள்

'வாப்பா, என்ன சட்டை போட்டுக்காம போர்வை போத்திட்டு வந்துருக்க, நெவர் மைண்ட், இது ரிசர்ச் லேப், நான் நிறைய யோசிப்பேன், புக்ஸ் படிப்பேன், நோட்ஸ் எடுத்து தரணும் தெரியுதா!'

அவன் என்னை பறவை காய்ச்சல் வந்தவனை பார்ப்பதைப் போல பார்த்தான்

'என்ன, டெரஸ்ட்ரியல் போல பார்க்கிறே!'

'நோ!'

'உனக்கு என்ன வேண்டும்?'

'எனக்கு இங்கு ரொம்ப பிடித்திருக்கிறது சார்!'

'பரவாயில்லை!, என்னையும் போய் 'சார்' என்கிறாய், என் மடத்தனத்தை நான் நொந்துகொண்டிருந்தேன், ஏதோ ஒரு ஆராய்ச்சியென்று ஜல்லி அடிப்பதாக எனக்குள் ஒரு நெருடல்,எனக்கும் மரியாதை இருக்கிறது தான்'

'உங்கள் பெயரை சொல்லி அழைக்கட்டுமா?'

'அது மட்டும் வேண்டாம், இந்த கதை முடியும் வரை என் பெயரை நான் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஒரு எழுதப்படாத சாசணமாக வைத்திருக்கிறேன், நீ வா, போ என்றே கூப்பிடு, இடைவெளி வேண்டாம் நமக்குள்'

'சரி! உன் பயோ-டேடாவை தா, அரசுக்கு விண்ணப்பித்து விடுகிறென்'

'என்ன கால்சட்டையை அவிழ்க்கிறாய்?'

அவன் விடுவிடுவென தன் மேலங்கியை உதறிவிட்டு கால்சட்டையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையோடு நின்றான், மெட்டல் கலந்த சாம்பல் நிறம், கண்களில் கிரிஸ்டல் எனக்குள் கூசியது, அதற்க்குள் ஒரு வியூபைண்டர் மெல்ல மெல்ல முன்னும் பின்னும் நகர இமைகள் படபடத்தன, உடம்பின் வளைவுகள் நேர்த்தியாக புருவத்தை ஒதுக்கியதை போல சன்னமாக இருந்தது, உதட்டு எச்சிலில் ஒரு வகை பசை மிண்ணியது, முழங்கால்களில் கூட பூனை முடி, முதுகில் நம்பர் பிளேட்

இருக்கையை விட்டு எழுந்துவிட்டேன்

'அப்ப நீ வேற ஜாதி!'

'யெஸ்!'

'பெயர்?'

'டெல்!'

'பிஸிகல் அண்ட் மெக்கானிக்கல் வயது?'

'போட்டீன் டூ!'

அதாவது பதினான்கு வயது பையனாக இரண்டு வருடங்களுக்கு முன் செய்யப்பட்டிருக்கிறாய்!'

'எக்ஸ்பையரி தேதி என்ன?'

'புதிய தலைமுறையை சேர்ந்தவன், மனிதர்களை போல அல்ல, என்னைப் போன்ற ஜென்மாக்கள் ஜீவாத்மாக்கள்!'

'சித்தாந்தமா?'

'இங்கு வந்ததில் எனக்கு பரமாணந்தம்!'

'என்ன சிலேடையா?,சரி! சொல் எதற்காக உன்னை அனுப்பியிருக்கிறார்கள்?'

'வேலைக்கு!'

அவன் என் ஆராய்ச்சிக்கூடத்தை அங்குலம் அங்குலமாக தன் மைக்ரோ பிராஸஸருக்குள் உள் வாங்கிக்கொண்டான், கால்சட்டையை திரும்ப அணிந்துகொண்டான்,அவன் பிற்பாடு என்னிடம் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியபடவைத்துவிட்டது

'உனக்கே தெரியாமல் இங்கு ஒரு பொருள் காணவில்லை, அதை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?'

'இம்பாஸிபில்!'

'திருடிக்காட்டட்டுமா?'

'ஒரு செக்யூரிட்டி சிஸ்டம் இல்லாமல் அநாமத்தாக எல்லாவற்றையும் சூறை விட்டுடுவேனா அசமஞ்சமாக?'

'அவன் நான் பேசுவதை ஒரு இளக்கார புண்ணகையோடு பார்த்துக்கொண்டே அவன் கால் சட்டையிலிருந்து இரண்டு ஜீனர் டயோடுகளை

எடுத்து என் முன் போட்டான்'

'இது எப்ப?'

'சோ தப்பு!'

'எதில?'

'கம்ப்யூட்டரே தப்பு!'

'யார் எதை பற்றி பேசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா?, இதெல்லாம் எப்படி டெல், ஒரு சின்ன வயரைகூட என்னையன்றி ஒருவராலும் இங்கு தொடமுடியாது, எல்லாவற்றிலும் கெமிக்கல் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் வைச்சிருக்கன், இது எப்படி?'

'இப்போதிருக்கும் பத்தாம் ஜெனரேஷன் கம்ப்யூட்டர்களில் ஒரு புது யுக்தி இது, கொஞ்சம் அப்படி இப்படி இருந்துகொள்ளலாம் என்கிற நழுவல் விதி, இதை 'தியரி ஆப் எஸ்கேப்' என்று சொல்வார்கள்',

'அது கெட்டது போ'

'எங்களால் கவிதை எழுத முடிகிறது, ஏன் காதல் செய்யமுடியவில்லை?'

'அதுவும் செய்யப்போகிறீர்கள், முதலிரவில் தான் உங்கள் நிழல் நிஜமாக ஆகித் தொலையும், அதுவரை எத்தனை பொய்கள் சொல்லப்போகிறீர்களோ, உலகத்து புத்தகத்தையெல்லாம் படித்துவிட்டு கவிதை சொல்லி காதலும் வளர்ப்பீர்கள், பொய், பொய் ஜென்மங்கள், சரி டெல்! விஷயத்திற்க்கு வருகிறேன், என் பணமெல்லாம் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்தது, சில பாடாவதி இயந்திரங்களால் நான் நட்டாத்தில் போய்விடக்கூடாது, ஏதாவது யோசனை சொல்'

'சமயம் வரும்போது சொல்கிறேன், இப்போது சொன்னால் வெளியில் பிரச்சினையாகிவிடும்'

'நீ சொல்வதற்குள் நாணும் என் பணமும் காலாவதியாகிவிட்டால்...?'

'அதற்கு நான் பொருப்பாளியல்ல'

'ஓ கே... நீ முதலில் வேலையில் சேரு'- ஒரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் கிழித்து அவன் கையில் திணித்தேன், இதெல்லாம் அரசாங்க விதி, ஒரு ரோபோவை பத்திரமாக ஒரு ஜான்சன் பேபியை பார்த்துக்கொள்வதைப் போல பார்த்துக்கொள்ளவேண்டும், எக்குத்தப்பாக பேசிவிடக்கூடாது, அதிக வேலைகள் வாங்கக்கூடாது, பேட்டரி, ஆயில், ரீசார்சர்கள் என்று ரேஷன்கள் பக்காவாக தந்துவிட வேண்டும் என்பதெல்லாம் அரசாங்க ஷரத்து ரோபோ-லா சொல்கிறது.

'ஒரு முக்கிய ஆராய்ச்சி, நான் இன்று வேலை பார்க்கவில்லை, நீ வேண்டுமென்றால் லீவு எடுத்துக்கொள் டெல்' என்று சொல்லிவிட்டு என் கையடக்க பிஸியில் ஒரு கால்குலேஷன் சரிபார்த்துக் கொண்டிருந்தேன், டெல் சரியாக நூறு அடி தள்ளி நின்றிருந்தான்

'என்ன ஜாக்பாட்டா?' கேட்டுவிட்டான்

ஆடிப்போய்விட்டேன்

'வ்வாட்...மனசை படிப்பாயா டெல்!'

'வார்த்தை பிசகாமல் மனசை படிக்க இனி வரும் தலைமுறைகளுக்கு கற்றுத் தருகிறார்களாம், ஐரீஷில் இதற்கான ரோபாட்டிக் சிம்போஸியத்தில் தீஸீஸ் சப்மிட் பண்ணியிருக்கிறார் ஒரு தாத்தா'

'அப்போது மனிதனின் சுதந்திரம்?'

'அந்த தாத்தாவுக்கு தான் வெளிச்சம்'

'அவர் மண்டையை போட்டுவிட்டு இருக்கிறவனை பாதாளத்தில் தள்ளிவிடுவார்'

'உன் கையடக்க பிஸியில் நீ போடும் கால்குலேஷன்களை என் ரிமோட் மைக்ரோபிராஸஸர் தானாக படித்துவிட்டது, ரொம்ப சாரி!'

'இது டேஞ்சர் டெல், அது தானாக படிக்கவில்லை, தப்பாக படித்துவிட்டது, உன் சீட்டு கிழிந்துவிட்டது, நீ கிளம்பு!'

'சாரி...இந்த ஒரு முறை....'

'வேண்டாம் என்னை ஆழம் பார்க்காதே டெல், நேற்று ஜீனர் டயோடு திருடினாய், இன்று என் மூளையையே திருடிவிட்டாய், போய்விடு, இந்த மூக்கு நுழைக்கும் வேலையெல்லாம் ரொம்ப ஆபத்து, விலகிவிடு, சொல், உன்னை யார் என்னை வேவு பார்க்க அனுப்பிவைத்தார்கள்'

'யாரும் என்னை அனுப்பிவைக்கவில்லை'

'பிறகு!!!'

'தெரியாமல் வந்தேன், நாப்பது இன்ஃப்ரா ரெட், பத்து ஸ்டீல் கதவுகள், ஏழு வாய்ஸ் ஆக்டிவேட்டர்களை உடைத்து விட்டு வந்திருக்கிறேன், கொஞ்சம் அலாதியான மாடல் என்னுடையது, குயக்தியாக சிந்திக்கும் திறன் வந்துவிட்டது, நிறைய காரணம், உலகம் எங்களுக்குள் எப்படி அடங்கியது, மனிதர்களின் அடிப்படையான தேவைகளுக்காக வந்தோமா?, அடிமைபடுத்துவதற்காக வந்தோமா? இவர்களால் நாமில்லாமல் ஜீவிக்க முடியாதா? ஏன் இவர்கள் இப்படி ஒரு மின்காந்த வேலிகளுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள், வியந்து தான் வெளியே கிளம்பி வந்தேன், எப்படியாவது இதற்கெல்லாம் நாணும் நான்யாங் பல்கலையில் ஒரு தீஸீஸ் எழுதி சாவதற்குல், ஐ மீன் நான் வீழ்வதற்குள் ஒரு டாக்டர் பட்டம் வாங்கிவிடவேண்டும், என்னை நம்பு, என்னை மாட்டிவிட்டுவிடாதே, கொளுத்திவிடுவார்கள்' டெல் கெஞ்சினான்

'இல்லை டெல், இப்படி ஒரு அதிகபிரசங்கி ரோபோவை இப்போது தான் பார்க்கிறேன், உன்னை வைத்திருப்பது அந்த காலத்தில் ஏதோ சொல்வார்களே வேலியில் போன ஒன்றை வேட்டிக்குள் விட்ட மாதிரி'

'ஓணான்!'

'இந்த அளவுக்கு உனக்கு ஒரு நாலேஜ் பேஸ் எப்படி சாத்தியம் டெல்!'

'சிங்கப்பூர் தலைமை நூல் நிலையத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டேன்',

'சுத்தம், கெட் அவுட் ஐ ஸே!'

'வேண்டாம், உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்'

'ஒரே வரியில் உபத்திரவம் வேண்டாம், வெளியில் போ, இல்லையென்றால் ரோபோ-காப்பிடம் கையகப்படுவாய்'

டெல் மொளனமாக நின்றிருந்தான், கவலையில் அவன் முகம் வெளிறி அசலாக வியர்த்திருந்தது, இது கூட இந்த மாடலில் சாத்தியமா எனக்கு வியப்பு, அப்புறம் அவனே தொடர்ந்தான்

'ஜாக்பாட் பரிசு உனக்கு வேணுமா?'

டெல்லை ஒரு முறை முறைத்துவிட்டு, அவன் கெட்டிக்காரத்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்க முடியவில்லை, மனிதர்களிடம் அத்தனை இயல்புகளும் அவனிடம் அதாவது இதனிடம் இருக்கிறது, நிறைய கற்றுக்கொண்டு நிறைய சத்தாய்க்கிறது, பேசாமல் இதை கூடமாட வைத்துக்கொண்டால் ஒரு இரகஸியத்தை கூட காபுந்து பண்ணிக்கொள்ளக்கூட முடியாது எனும்போது எதற்கு இந்த உதவாக்கரை உலோகம்,

ஆனாலும் அந்த ஜாக்பாட் பணத்தை நினைக்கும் போது என் லாஜிக்கின் பல்ஸுகள் தடுக்கி தடுக்கி நிதானமிழந்து வேலையில்லாத எனக்கு இப்படி ஒரு தொகை ஒரு பில்லியன் டாலர், நினைக்கும்போதே நிலவில் குடியேறும் ஆவலோடு

'எப்படி டெல் உன்னால் முடியும்?'

'அதற்கெல்லாம் வழி இருக்கிறது, ஜாக்பாட் இயந்திரம் ரொம்ப பழைய வர்ஷன், எனக்கு அது பற்றி அக்கு வேறு ஆணி வேறு தெரியும்!'

'இயந்திரத்தில் நுழைய பார்க்கிறாயா?'

'அதெல்லாம் முடியாது, செக்யூரிட்டி ஃபயர்வால் அதிகம், ராண்டமாக அது சிந்திக்கும் அளவுக்கு என்னால் யூகிக்க முடியும், அதன் கெர்ணலை கொஞ்சம் நிதானித்தால் அதனுடன் பேசிவிடுவேன்'

'சரி! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'

'முதலில் நான் சொல்வதை கேள், ராண்டமாக ஆறு ஆறு எண்கள் தருகிறேன், லாட்டரிகள் வாங்கு, கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்ப்போம்'

சரியென்று வாங்கத் துணிந்துவிட்டேன், போட்ட காசை எடுத்து விட வேண்டும், எங்கிட்டயே பாவலா காட்டும் அந்த ஜாக்பாட் மெஷினிடம் என் உயிரையே பணயம் வைக்க துவங்கிவிட்டேன், ஒரு மாதம், இரண்டு மாதம்...ஆறு மாதம்....ஒரு வருடம், என் வங்கிக்கணக்கில்முக்காள் வாசி டாலர்கள் தாராவந்துவிட என் ஆராய்ச்சிசாலையின் முக்கியமான ஒரு இறக்குமதி ஆசிலாஸ்கோப்பை விற்று டிக்கெட்டுகளை வாங்கினேன், சும்மா சொல்லக்கூடாது, எப்போதாவது ஒரு அஞ்சோ பத்தோ வந்து தலைகாட்டும், இளைத்துக்கொண்டே வந்த என் பர்ஸ் ஒரு கட்டத்தில் கிழிந்து பணாலாகிவிட்டது

'டெல்!'

'என்ன இதெல்லாம்?'

'டெக்னாலஜி!'

'அது தான் என்னன்னு கேக்கறேன்!'

அவன் ஏதேதோ காரணங்கள் சொன்னான், ரோபாட்டிக்ஸ் எஞ்சினியரிங்கில் பிஸ்து தான் நான், எனக்கே புரியவில்லை, பிற்பாடு எனக்குள் பசி, துக்கம், இன்பம், துண்பம், அவஸ்தை, மரணம், ஜணனம் எல்லாம் மறந்துபோனது, எடுமுனையில் என் கம்ப்யூட்டர்கள் ஒவ்வொன்றையும் கடப்பாரை வைத்து பிளந்தேன், சாலைகளில் பஸ்,டேக்ஸி ஓட்டும் ரோபோக்களை பார்த்த மாத்திரத்தில் அவைகளை கடிக்க ஆரம்பித்துவிட்டேன், டெல்லை கண்டபடி மாணாங்கனியாக வசை பாடினேன், பாராட்டினேன், ஒருமுறை அவன் கண்ணத்தில் முத்தமிட்டதாகக்கூட நியாபகம், என் சட்டை, பேண்ட் ஒரு நாள் கிழிந்திருந்தது, ஒரு நாள் டெல் தான் என்னை ஒரு அவசர ஆஸ்பத்திரியில் சேர்த்தான், அந்த மனநல மருத்துவர் என்னை சோதிக்காமலேயே சேர்த்துக்கொண்டார்

'நீ தான் இவரை கூட்டி வந்தாயா?'

'எஸ் டாக்டர்!'

'நீ என்ன தம்பி பண்ற?'

'சிட்டிஹால் பக்கத்தில் ஒரு ஆராய்ச்சிக்கூடம் வைச்சிருக்கேன்'

'கேஸ் ஷீட் எழுதனும், இவர் பேர் சொல்லு'

'தெரியாது, 'லூசு' ன்னு எழுதிக்கங்க'

என்னை அநாமத்தாக அங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டான், கடைசியாக அந்த ஜாக்பாட் பரிசை பத்தி நான் சொல்லலையே, அந்த கிராதகனுக்கே விழுந்துட்டுதாம், பேப்பர்ல படிச்சேன் அது தான் உங்களுக்கு எழுதினேன்.

-
3.ஏத்திவிடு

     என்னையும் சேர்த்து நாண்கு பேர் சிங்கப்பூர் செல்ல இருக்கிறோம். எப்போது என்று கேட்கிறீர்களா, நாளைக்கு, நாளைக்கு என சொல்லிக்கொண்டிருக்கும் அந்த புண்ணியவானைத்தான் கேட்கவேண்டும்.

     முதலில் என்னைதான் அந்த ஆள் பிடித்தார், கூலிங்கிளாஸ் போட்டிருந்தார், செண்ட், செருப்பு எல்லாம் இப்போது தான் அவர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருகிறார் என்று சொல்லவைத்தன.

     தம்பீ!, நீங்க வெளிநாடு போக ஆசைப்பட்றீங்களா?, பதினாறாயிரம் சம்பளம், ஃபுட் அண்ட் அகாமடேஷன் ஃப்ரி, இரண்டு வருஷம், அப்புறம் உங்களுக்கே விருப்பம்னா வரலாம், வந்துட்டும் போவலாம், அது உங்க இஷ்டம், நீங்க ரொம்ப படிச்சி வேலையில்லாம இருக்கீங்கன்னு கேள்விபட்டேன், அதான்னார்.

     நானும் எவ்வளவு ஆகும்னு கேட்டேன்.

     நீங்க வேற தம்பி, அம்பது, அறுவதுன்னு சொல்லி ஏமாத்துவானுங்க, எங்கிட்ட மொத்தம் நாலு விசா இருக்கு, அத்தனையும் சிங்கப்பூர்ல பெரிய கம்பெனிங்க, என் பயன் கூட அதில ஒன்னுலதான் வேலை செய்யறான், அவன் வாங்கி அனுப்பனதுதான் இந்த விசா, கவலையே படாதீங்க, உங்களை அக்ரீமென்டோட அழைச்சிட்டு போறேன்னார்.

     அக்ரிமென்ட்ன்னா?

     அதாவது, இங்க உனக்கு பெட்ரோல் பங்க் வேலை, எண்ணெய் கிணறு வேலைன்னு சொல்லி கூப்டுட்டு போய் ரோடு போட விட்ருவானுங்க, வீட்டுக்கு ஒரு போன் கூட போடமுடியாது, அதனாலதான் அக்ரிமென்ட். எட்டு மணிநேர டுயூட்டின்னா எட்டு மணி நேரந்தான், அப்பால, நீ உன் இடத்துக்கு கம்பெனி கொடுக்கற ஏசி கார்லையே போயிடலாம், அதும் ஓவர் டைம் பார்த்தாக்கா முதல்ல சொன்னேன்ல சம்பளம் அதை நாலால பெருக்கிக்க வேண்டியதுதான்.

     இவ்வளவு செய்யறிங்க, நீங்க.. என்று இழுத்தேன்,

     முதல்ல இன்னும் ஒரு வாரத்துல கிளம்பணும், மூணு பேரை சேர், பாஸ்போர்டுக்கு முதல்ல ஆயிரம் கொடுன்னார்.

     நானும், இப்போ சொன்ன சம்பளத்தை நாளால பெருக்கி சரின்னுட்டேன்.

     அடுத்தநாள் மீன் விக்கிறவன், மளிகை கடைகாரன்னு பிடிச்சி நாலால பெருக்கின அமொளன்டை சென்னேன்.

     நாலாயிரம் எடுத்துபோய் அவர் வீட்டில் கொடுத்தோம், பெரியவீடு, பணக்கார ஆளாதான் இருந்தார்.

     எண்ணி ஏழாம் நாள் வா, பாஸ்போர்டுக்கு நாளைக்கு ஆளுக்கு மூணு போட்டோ எடுத்து வந்து கொடுங்க, பாத்தாக்கா சீனாகாரன் அப்படியே மூக்குமேல விரலவைக்கனும், அடுத்து மெடிக்கல் செக் அப் முடிஞ்சதும் அடுத்தநாளே பயணமாவறோம், போன உடனே முதல் வேளையா இரண்டு செட் பேண்ட் சர்ட், நீளத்துல, ஏன்னா அதுதான் அந்த கம்பெனி யூனிஃபார்ம், அப்புறமா ஒரு ஷூ.

     சரிங்க, பணம் எத்தனை ஆவும்னோம்.

     என்னப்பா நீங்க பணத்தை பத்தி கவலைப்பட்டுக்கிட்டு, என் மகன் அங்கே இருக்கரதால சீப்பா கிடைச்சது, தலைக்கு இரண்டு லட்சம்.

     எனக்கு என்னாடாது இந்த ஆள் இப்படி சொல்லிட்டாரே பணத்துக்கு எங்கே போவேன்னு கவலை ஆகிட்டுது, மீன்காரன் என் சைக்கிளை வித்தா ஐநூறு தேறும், மளிகை கடைகாரர், சீட்டு போட்ருக்கேன், பயப்பட வேணாம்னார், தேங்காய்காரர் ஆறு பவுன் எம்பொண்ணு கல்யானத்துக்கு வாங்கிவைச்ச நெக்லஸ் இருக்கு, இவ்வளவு சம்பாதிக்க வித்தா கெட்டா போவுதுன்னு தனியா போய் பேசிக்கிட்டோம்.

     ஏஜென்ட் வீட்டில், அவர் எங்களை பார்த்து ஒரு மாதிரி சிரிச்சி கவலைப்படாதிங்க, ஆளுக்கு இப்ப என்பதாயிரம் தாங்க, மீதிய அங்கபோய் சம்பாதிச்சி என் பையன் கைல குடுத்துடுங்கன்னார்.

     அடுத்த நாலஞ்சு நால்ல பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு எடுத்துட்டுப்போய் கொடுத்தோம், அப்பவே விசாவும் கொடுத்தார், அதிலையிம் பணம் இந்த கம்பெனிக்காக இரண்டு வருட வேளைக்காக நான் பெற்றுக்கொண்டேன்னு அக்ரிமென்டில் கையெழுத்து போட்டு தந்தார், இது வெறும் ஜெராக்ஸ் காப்பிதான், ஏர்போர்ட்ல இமிக்ரேஷன் அப்ப கம்பெனிகாரன் உங்களுக்காக சிங்கப்பூர்லருந்து  வருவான் கையோட கூட்டிட்டு போய்டுவான் என்றார்.

     நாங்க நாலு பேரும் வீடு வந்ததும், அந்த ஜெராக்ஸ் காப்பியை இன்னொரு காப்பி எடுத்துக்கிட்டு கூடவே ஒரு நல்ல கிடாகுட்டியையும் இழுத்துக்கிட்டு எங்க ஐயா சாமி இல்ல பாவாடைராயன் அதுக்கு படையல் போட கிளம்பிட்டோம், ஊர்ல உள்ள அத்தனை சாமிக்கும் சூடம் ஏத்தினோம்.

     ஒரு வாரம் கழிச்சி போணோம், பாஸ்போர்ட் இன்னும் வரல, ஒரு மாசம் ஆவும்னு இப்பதான் போன் வந்துதுன்னார், வந்துட்டோம், அதுக்குள்ள பேண்ட் சர்ட் எல்லாம் தைக்க குடுத்துட்டோம்.

     திரும்ப போனோம், என் பயனுக்கு உடம்பு சரியில்லையாம், முன்னூரு ரூபாய் செலவு பண்ணி சிங்கப்பூர்க்கு பேசினேன், அவன் வேற கம்பெனிக்கு மாறிட்டானாம், ஆனாலும் நீங்க அந்த கம்பெனிலதான் மாசம் என்பதாயிரம் சம்பளம்தான்,

     நாங்க பொருத்துப் பார்த்தோம், தினமும் போய் கேட்டோம், எங்களுக்கு வெளிநாடு ஆசையே விட்டுப்போச்சி, மறுபடி ஏதாவது தொழில் செய்யவும் காசில்ல, ஏமாந்துட்டமோன்னு புரிஞ்சது, அப்புறம் தான் அந்த யோசனை எங்களுக்கு வந்தது.

     அவர் நம்மூர் தானே!, ஆமாம் பெரிய பில்டிங், நிலமெல்லாம் இருக்கு.

     இது ஒன்னுபோதும், வா போலிஸ் ஸ்டேஷன்.


4.லிட்டில் இந்தியா என்னும் தேக்கா

சிங்கப்பூர் தமிழ்முரசு தமிழ் தினசரியில் வெளிவந்த என்னுடைய ஒருசில கவிதைகள்.

நண்பா
உனக்குத் தெரிந்த
மொத்த
தமிழ் வார்த்தைகளே
'வணக்கம்'
'நன்றி'
'தம்பி'
'போடா மச்சான்..'

நீ
பச்சை ஊர்தியில்
நீலப்பட சிடி
விற்றதை
வாங்கிப் போன ஆளிள்
நாணும் ஒருவன்!

உன்னை
அன்று
கைது செய்தார்கள்!
உன்
தடும்பலான
உடம்பை இழுத்து கைய்யில்
விளங்கு திணித்தார்கள்!

எத்தனை அபராதமோ!
எத்தனை தண்டனையோ!

மனம் கிடந்து
தவிக்கிறது!

ஓ...
என் சீன நண்பா!
யாரிடமிருந்தும்
நல்லதை மட்டும்
கற்றுக்கொள்!

சொகுசு வாழ்க்கை

பூந் தொட்டிகளில்

மரம் வளர்க்கிறோம்

மரப் பொந்துகளில்

பூ வளர்க்கிறோம்

நாகரிகத்தின் வேர்

நாலாபக்கமும் இறைந்த

நதியைப் போல

நங்கூரக் கட்டிடங்கள்

இருட்டும் தெரியாத

வெளிச்சமும் தெரியாத

குளிர்கால அறைகள்

கம்பளி போர்வைக்குள்
மரம்

மைக்ரோ சிப்புகளில்

குட்டி ஆன்டெனாக்கள்!

பார் கோடுகளில்

பத்திரமாக உலகம்!


கடல் மின்சாரம்!

காகிதமற்ற அலுவலகம்!

மின் அஞ்சல் முகவரி!

கட்டை விரலில் கரண்சி தேடல்!


செவ்வாயில் முதலீடு!

நிலவில் சிட்டிசன்ஷிப்!

அட்டானமஸ் கம்யூட்டர்!

அதிவேக ராக்கெட்!


இத்தனையும்!


மனிதனுக்கு மூன்றாம் பட்சம்!

மாதக் கடைசி வருவாயின்

வரியில் வந்த இரண்டாம் பட்சம்!


மழைக்காக மரங்களை

நட்டது அந்தக்காலம்!

கொசுக்காக

அதன் குரவளை

பிடிப்பது இந்தக்காலம்!


மின் கம்பங்களை

பூமியில் புதைத்துவிட்டு

மரக்கன்றுகளை

நட்டு வைத்து அழகு பார்த்தது

என் அழகு தேசம்!


கொசுக்காக மரங்களை

வெட்டுவதை விட;

நல்ல யோசனை!

மனிதர்களை வெட்டுங்கள்!


மழையில்லாமல் போனால்

மனிதனே ஆகிவிடுவான் ஒரு கொசு!

அப்புறம் தழைக்குமா ஒரு சிசு!

-
அங்கிள்

உனக்கு

அதிக இச்சையில்லை

அளவாக ஒரு பீர் போத்தல்!

இரண்டு பாக்கட் சிகரெட்!

இரையும் பீர் போத்தாளுக்கும்

கிழிந்த காக்கி அட்டைகளுக்கும்

நிற்க பழகிவிட்டதா உன் வறுமை!


பிள்ளைகள் எங்கே?

ஆடம்பரம், விவாகரத்து


மனைவி எங்கே?

யாரோடோ, எங்கோ


சொந்தங்கள் எங்கே?

பூட்டிய வாசல் கதவோடு

லிஃடில் பயணமாகிறார்கள்!


பேத்திகள்? பேரண்கள்?

...ம்..ம்

என்னைப்போல

சாய்ந்த நடையோடு ஒருத்தன்!

என்னைப்போல

இடது கைபழக்கத்தோடு ஒருத்தி!


அப்புறம்?

இந்த ஓரம் கிழிந்த

சிகப்பு அட்டைகளுக்கு

ஒரு தாங்கு மரம் வேண்டும்

ஒரு ஓங்கு நிழல் வேண்டும்
எம்மவ

மொளா விக்கறவன்

மல்லாட்ட உடைக்கறவன்

பூண்டு விக்கிறவன்

அஞசரப்பெட்டி சரக்கு அடிக்கிறவன்

சாவி போடறவன்

ஐஸ் விக்கிறவன்

பலுவணு விக்கிறவன்

அம்மிக்கல்லு கொத்தரவன்

மாட்டுத் தரவு பண்றவன்

பழ வண்டி தள்ரவன்

ஈயம் பூசரவன்

இரும்பு அடிக்கிறவன்

பழசு பொருக்கறவன்

பட்டணத்துக்காரன்

அத்தனை பேருக்கும்

ஒட்டுத்திண்ண

எடம் குடுத்துடு முதலியாரே..

எதிர் வீட்டு சன்னல்ல

எம் மவ  ஊர்ல

சமைஞ்சு

எட்டு வருஷமாச்சு!

-
வெளிச்சமில்லா விளக்கு
(என் கவிதை-சிங்கப்பூர் கடற்கரை கவியரங்கத்தில் முதல் பரிசு பெற்றது )

மனமாகாமல்
முப்பதை கடந்தால்
முதிர்கன்னி!
அதுவே!
அவளுக்கு குத்தும்
கரும்புள்ளி!

வேலையில்லாமல்
வயதை தொலைத்தால்
தண்டச்சோறு!
அதுவே!
அவனுக்கு ஆகாது - ஒரு
நிலாச்சோறு!
வெளிச்சம் இல்லாத
விடியல்!
வாழ்வுக்கொரு
கணக்கு!

எப்போது வரும்
கிழக்கு!
இதையே
நாளும் மனதில்
பழக்கு!


5.எட்டாம்பு

மிகத் திறந்த வெளியில் சில இலட்சிய கனவுகளோடு இருந்த என்னை ஏறிட்டாள் என் மனைவி ரேவதி.

'நீங்க வெளிநாடு போயிட்டா நான் பார்க்காவே முடியாது இல்ல, உங்களுக்கும் எத்தனை கஷ்டம், திரும்பி எப்ப வருவீங்க',

பேசாமலிருந்த என்னை விலக்கி முகம் பாத்தாள், அவள் முகத்திலிருந்த பருக் கூட தொலையவில்லை, பதினெட்டு வயது பெண் கட்டிக்கொண்டாள், கல்யாணமான மூன்றாம் மாதமே எனக்கென்னவோ அதிக தேவைகள் இருப்பதாக எண்ணி ஒரு ஏஜெண்டை மன்னிக்கவும் ஒரு ஆள் ஏத்தி தரகனை பிடித்து சிங்கப்பூர் கனவுகளில் நிழலாடிக்கொண்டிருக்கிறேன்,

'மெல்லப்போகக்க்கூடதா?'

'வயசு இருக்கப்பவே சம்பாதிச்சிடனும் செல்லம், உன் அப்பா போட்ட நாற்பது பவுன் நகையை மார்வாடிக்கிட்ட வைச்சா என்ன தேறும்'

'அதுக்குள்ளவேன்னா, கோவிச்சிக்கமாட்டாளா.?'

'நாற்பது பவுன் என்னடி, வர்ரச்சே நாலு கிலோ கொண்டாறேன், தங்கத்துல அபிஷேகமே பண்றேன், இப்ப எதாவது கத்தினார்னா அப்ப பாத்துக்கலாம், கொண்டு போய் மூஞ்சிக்கு எதிர்ல கொட்டலாம்',

'இதெல்லாம் சரிப்படுமா?...'

என்று இழுத்தாள்.

'அசடு..அசடு இருக்கற நல்ல வேலையை விட்டுடக்கூட இல்ல நான், ஒரு இரண்டு வருஷம் ஜகா வாங்கிண்டு போறேன், அப்புறம் பாரு, காரு,ஏசி,பங்களான்னு ஜமாய்ச்சுடலாம்'

'இப்ப உங்க சம்பளம் பதினேழு சொச்சம் வாங்கறீங்க, அதுவே போறாதா?'

'என்னடி அசமங்சமா பேசற, கம்ப்யூட்டர் எங்ஜினியர்க்கெல்லாம் சாரி பொறியாளர்க்கெல்லாம் என்ன கிராக்கின்னு உன் எட்டாங்கிளாசுக்கு எங்க புரியப்போறது, கழுதைக்கு தெரியுமா...'

'சரி சரி திட்டாதிங்க, நான் ஆச்சு நகை கொடுக்க, என் அப்பாரை வீணா வம்புக்கிழுக்காதிங்க, மருமகன் நல்லாருந்தா அவருக்கும் மரியாதை தானே'

'மரியாதை, எனக்கு என்னடி மரியாதை, மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ஒரு டப்பா காரை அரேஞ் அது என்ன ஏற்பாடு பண்ணி அது பார்த்தசாரதி கோயில்ல டயர் பஞ்சராகி (தமிழில் அர்த்தம் தெரியவில்லை) சகுணம் சரியில்லையென்று சண்டை ஆரம்பிக்க கடைசில என் அம்மா காது கிழியறாப்பல என் அப்பா அடிச்சிட்டது எல்லாம் ரொம்ப அபத்தம்'

ரேவதி பேசாமலிருந்தாள்

'அப்ப உங்க முடிவை மாத்திக்கல'

'கல'

'சரி! உங்க இஷ்டம், எனக்கு இந்த மஞ்ச கயிறு போதும், நீங்க ஷேமமா போங்கோ, வேளாவேளைக்கு..'

'ஸ்டாப், ஸ்டாப் இட் எல்லாம் நடக்கும், எங்க உன் நகைங்க!'

அடுத்தநாள் பங்கஜ்லால் சேட்டிடம் தமிந்தியில் பேசி வீராவேசமாக பணம் ஒரு லட்ஷம் வாங்குவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, கிராம கூட்டுறவு வங்கியில் வட்டி குறைச்சல் அசல் கம்மியாக வரும், சேட்டிடம் வட்டி அதிகம், இருந்தாலும் டாலர்களில் சம்பாதிக்கும் போது இதெல்லாம் துக்கடா.

ரேவதி ஒரு லட்ஷத்தை வாங்கி அடுக்களை, சாமி அறை, அஞ்சரைப்பெட்டி, அரிசிப்பாணை, தலையணை என்று வைக்க இடம் பார்த்து ஒன்றும் தேறாமல் அந்த ஒரு லட்ஷத்தை என்னிடமே திருப்பித்தந்தாள்,

'பேங்க் அக்கொளன்ட்ல போட்டுடுங்களேன்'

'தமிழ்ல சொல்லுடி!'

'நீங்களும் உங்க தமிழும் இங்கிலீஷ் அர்த்தம் சொன்னா தான் தமிழே புரியப்போற காலம் வரப்போறது பாருங்க'

'சரி சரி, நாளைக்கு விஸா கிடைச்சுடும்டி, இன்னைக்கே பணம் தந்துடணும், அவன், அவன் வேளயை பார்க்கவேணாம்'

'அதுவும் அரி தான், எங்க அப்பா குருவி சேக்கறா மாதிரி சேத்தது, கை காசில்லாம இருந்த ஸ்கூட்டரை கூட வித்துட்டுது, பாத்துக்கங்க'

அவள் கவலை எனக்கு புரியும், இருந்தாலும் அவளுக்கு மேலும் மேலும் புரியவைக்க எனக்கு பிரயாசை இல்லை, கிளம்பிவிட்டேன்.

அந்த ஆள் ஏத்தித்தரகன் சிதம்பரத்தின் மைய்யத்தில் அலுவலகம் வைத்து, ஒரு ஒன்றறை ஆயிரம் குளிர் அறையில் அவன் மட்டும் பணத்துடன் புழங்கிக்கொண்டிருக்க, வெளியில் அவன் வேலை ஆட்கள் விசிறிக்கொண்டிருந்தார்கள், என்னை பார்த்ததும் ஒரு டீ வந்தது.

'சரவணன் இதப்பாருங்க, நீங்க சிங்கப்பூர்ல வேலை செய்யப்போற கம்பெணி பெரிய மல்டினேஷன் கம்பெணி, அதில வேலை வாங்கறதுக்குள்ள பெரும்பாடாயிட்டுது, மெடிக்கல் முடிச்சுடலாம், எப்படியும் அங்க ஒரு மெடிக்கல் இருக்கும், கையில் டாலரா மாத்தி பணம் வைச்சுக்கங்க, ஏர்ப்போர்ட்ல இறங்கினதும் கமிட்டி பீப்பிள்ஸ் வந்து ரிஸீவ் பண்ணிப்பாங்க, தெரியுதுங்களா!'

'சரிங்க!'

'பாஸ்போர்ட்டையும் பணத்தையும் தந்துட்டு பில் வாங்கிட்டுப்போங்க, நாளைக்கு விஸா பேஃஸ் வந்ததும் மீதி பணத்தை கட்டிடுங்க, அப்புறம் ஒண்ணு, டிக்கெட் பிளாக் பண்ணணும், நளைக்கு பணத்தை கட்டிடறது நல்லது'

'அதெல்லாம் கட்டிடலாம்'

அன்று முழுவதும் என் மனைவி தூங்கவேயில்லை, இரவு ஒன்பது மணிக்கே சாப்பாடு போட்டு படுக்கையை போட்டு என் எதிரில் உட்கார்ந்து கொட்ட கொட்ட முழித்துக்கொண்டிருந்தாள், எடுத்ததுக்கெல்லாம் பயப்படுகிறவளுக்கு எந்த விதத்திலும் என்னால் புரியவைக்க முடியவில்லை.

அடுத்த நாள் தெரிந்தவர்களிடம் எல்லாம் என் வீட்டின் பத்திரத்தை கொண்டு போய் நீட்டி பணத்தை தேத்திக்கொண்டு என் மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்த ஆள் ஏத்தியிடம் சென்றேன், வழியில் மயக்கமாய் வந்து தலை சுத்துகிறது என்றாள்,

'மாத்திரையெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கற இல்ல'

'என்னவோ தெரியல, ஒரு வாரமா உடம்பு சரியாயில்லை'

'குழந்தை ஆசையெல்லாம் இப்போதைக்கு நமக்கு வேணாம், கொஞ்சம் பணம் சேர்த்துண்டு நாலு என்ன அஞ்சு கூட பெத்துக்கலாம்'

ரேவதி பேசாமலிருந்தாள்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் தாண்டி இரயில்வே பாலம் அதற்கு அடுத்து ஒரே கூட்டம், வண்டியை விட்டு இறங்கினோம்,

என்ன ஏதென்று விசாரிப்பதற்குள் ஒருவாறு என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது,

பெரிய கோத்ரெஜ் பூட்டு, ஏழு லீவரில் (தமிழில் அர்த்தம் தெரிந்தால் எனக்கு ஒரு மின் அஞ்சல் தட்டிவிடலாம்), ஏட்டய்யா என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு வந்தார்

'நீயும் பார்ட்டியா?'

'புரியல!'

'வெளிநாடு போக பணம் கட்டினியாப்பா?'

'ஆமாம் சார்'

'எவ்வளவு?'

'ஒர்ரூபா சார்'

என் மனைவி அதற்குள் என்னிடம் பதுங்கி பதுங்கி ஏதோ சொல்லவந்தாள்

'சும்மார்ரீ'

'அவன் ஓடிட்டான், காலையிலருந்து கமிஷ்னர் ஆபிஸுக்கு அம்பது கம்ப்ளெய்ண்ட் வந்தாச்சு, ஓடு, கமிஷ்னர் ஆபிஸ் ஓடு'

'அப்போ என் பணம், பாஸ்போர்ட்டு?'

'படிச்சவன் தானே நீ!, பணத்தை குடுக்கறப்ப பங்குடா குடுத்துடறீங்க, அப்பல்லாம் கேக்கமாட்டன்றீங்க, அவன் ஓடிட்டான்னதும் குய்யோ முறையோன்னு போலிஸ்காரண்ட்ட வந்துடறீங்க, ஏம்ப்பா பணத்தை தான் அழுத, பாஸ்ப்போர்ட்டையுமா தருவே',

'அய்யோ!'

என் மனைவி மூக்குறிஞ்சி கோபத்தையும், இயலாமையையும் ஒரு சேர முந்தானையில் துடைத்துக்கொண்டாள், எனக்கு சற்று மயக்கம் வர அதுக்குப்பிறகு நடந்தது எல்லாம் முதலியார் கடை டீக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வர

'ஏமாத்திட்டானா ரேவதி?'

அடுத்தநாள் காலையிலேயே தூங்காமல், சவரம் பண்ணிக்கொள்ளாமல் என் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டேன், என் மேசை முழுவதும் கமிஷனரிடம் தந்த பிராதுக்கள், அது இதுவென்று நிறைய அலம்பல்கள், என் மனைவி என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை, அன்று மாலை

நான் அலுவலகம் விட்டு வந்தபோது என் மாமனார் வீட்டில் வந்து உட்கார்ந்திருந்தார், அவரும் என்னிடம் எதுவும் கேக்கவில்லை, என் மனைவி தான் என்னை அடுக்களையில் வைத்துக் கேட்டாள்.

'பேப்பர்லல்லாம் வந்துட்டுதாமே!'

'ம்'

'எழுபது பேரை மோசம் பண்ணிட்டானமே, கிராதகன்'

என் மாமனார் காதில் விழவேண்டும் என்று கொஞ்சம் வேகமாக சொன்னேன்

'அதெல்லாம் உள்ளூர்க்காரன் தான், பிடிச்சுடுவாங்க'

'கோர்ட்டுக்கு போறாராமா?'

'தெரியலப்பா!'

'அவன் மஞ்ச நோட்டிஸ் நீட்டுவான், என்னால இப்ப முடியாது, எல்லாத்தையும் நாணும் ஒரு ஏஜெண்டை நம்பி ஏமாந்துட்டேன், கையில பரம்பைசா கிடையாதுன்னு பெரிசா கையை விரிப்பான், வேண்ணா அஞ்சோ பத்தோ மாசாமாசம் தரண்ணுவான்'

பொட்டில் அறைந்தாற்ப்போல் எனக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

'பாஸ்போர்ட்டைப் போய் தருவீங்களா!, என்ன நீங்கள்ளாம் படிச்சவங்க!'

'அவன் நாளைக்கே ஃபிளைட்டுன்றான், அதான் நம்பி கொடுத்தேன்'

'சரி! எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் மூலமா ஐ.ஜி யைப் பார்த்து பேச அப்பாயிண்மெண்ட் வாங்குவோம், பாஸ்போர்ட்டையாவது மீட்டுட முடியுமான்னு பார்ப்போம்'

'அப்ப பணம்!', இது என் மனைவி

'நாமம் தான்'

சொல்லிவிட்டு வெளியே கிளம்பி போய் விட்டார், ஒரு பத்து நாட்கள் கழித்து ரிஜிஸ்டர் தபாலில் என் பாஸ்போர்ட் மட்டும் வீடு தேடி வந்தது, அனுப்பிய ஊர் மும்பாய் என்று நீலம் குத்தியிருந்தது, அரை சதவீத ஆறுதலுடன் 'பணம் நாம பார்த்து சம்பாதிக்கிறது ரேவதி, இதப்பார் நம்ப தெய்வம் நம்மலை கை விடல!' என்று பாஸ்போர்ட்டை பிரித்தேன், இரண்டாவது பக்கம் என் போட்டோவோடு அந்த பக்கத்தை காணவில்லை, அப்புறம் அப்புறம் வேறு சில பக்கங்களும் காணாமல் போனபோது என்க்கு அழுகையே வந்துவிட்டது.

என் மனைவி தான் போண் பண்ணி அவள் அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டும், திடுதிப்பென்று வந்துவிட்டார், பாஸ்போர்ட்டை பார்த்தார்.

'சரி! கவலைப்படாதீங்க, இதை தனியா ஒரு பிராது தந்துட்டு டூப்ளிகேட்டுக்கு அப்ளை பண்ணிக்கலாம் ' என்றார்

'இவருக்கு எதுக்கப்ப டூப்ளிகேட்டு?'

'இல்லம்மா, வாழ வேண்டிய வயசில இப்படியெல்லாம் படணும்னு இருக்குது, என் பிராவிடண்பண்ட், சேவிங்ஸ்னு கொஞ்சம் பணம் இருக்கு, அதெல்லாம் கவலைப்படாதீங்கன்னு சொல்லு, இனிமேலாவது ஹிண்டு, எக்ஸ்பிரஸ்ன்னு பேப்பர் பார்க்க சொல்லு, இண்ட்ர்வியூ அட்டண்ட் பண்ணி போக ட்ரை பண்ண சொல்லு!' என்று கிளம்பிப்போனார்.

வருத்தமாக என் மனைவி என்னை பார்த்தாள்

'இல்லடி செல்லம், நான் எங்கையும் போகல, இந்த வேலையே போதும், நமக்கு கிடைச்சது இது தான், அது தானே உன் விருப்பமும்?'

'இல்லைங்க, நீங்க கண்டிப்பா சிங்கப்பூர் போகணும், உங்க கனவு நனவாகனும்' என்றாள்

'ரேவதி நான் கேக்கறதுக்கு முதல்ல பதில் சொல்லு, ஒரு கல்யாணமான பொண்ணுக்கு எது மரியாதை?'

அவள் கண்களை மூடிக்கொண்டு சொன்னாள் 'தாய்மை!'

'கரைக்ட், நீ என்னெல்லாம் சொன்ன, நான் கேக்கவேயில்ல, பணத்தை மத்தவங்க துறத்தறதை பாத்து நாணும் இந்த சம்பள வேட்டைக்கும், டாம்பீகத்துக்கும் ஆசைப்பட்டு உன்னை ஒரு நிழல் மரமாவே நிக்கவைச்சு குளிர் காஞ்சனே அதுக்கு நான் பட்ட வேதனை தான் இதெல்லாம், இது போதும் ரேவதி, முதல்ல நாம ஒரு குழந்தையை பெத்துப்போம், உங்க அப்பா படற கஷ்டம் போதாதுன்னு அவர் பேங்க் பேலன்ஸிலும் கை வைச்சு நாளைக்கு அதுவும்....'

'அப்படி சொல்லாதீங்க'

'நான் ஏமாந்து போனது எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை தந்துட்டுது, இவர் கையாலாவாத ஆளோன்னு உன் அப்பா என்னை கணக்குப்போட்டுடுவாரோன்னு பயம் வந்துட்டுது ரேவதி!'

'ஏமாற்றம் இல்லாத வாழ்க்கை உலகத்தில எங்கையும் பாக்க முடியாதுங்க, நல்லதும் கெட்டதும் நடந்துக்கிட்டே தான் இருக்கும், இதுக்கெல்லாம் பின் வங்கினா வாழறதுல அர்த்தமே இல்லைங்க'

நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்

எஸ்.பி அலுவலகத்திலிருந்து போண் அடித்தது, அந்த ஏஜெண்டை பிடித்து விட்டதாகவும், வாங்கிய பணத்தை அனைவருக்கும் பைசல் பண்ணுவதாகவும் சொல்லி அழைத்தார்கள்

உள்ளூர ஜில்லிப்பாய் இருந்தது.

'பணம் வாங்கினாலும் நான் சிங்கப்பூர் போவப் போறதில்லை ரேவதி'

'ஏன்?'

'ஏதோ குற்ற உணர்ச்சி, உன் அப்பா எதிர்ல தலைகுனிஞ்சு நின்ன அதிருப்தி'

'அவர் மட்டும் யார்?, எதுக்காக அவரை மூணாம் மனுஷாளா பிரிச்சுப் பாக்கறீங்க, உங்க அப்பா மாதிரி இல்லையா அவர்?'

சற்று நேரத்துக்கு பின் கேட்டேன்

'ஆனாலும், நான் ஏமாறல இல்ல ரேவதி?'

'ஆமாம்!'

'என்ன ஆமாம்?'

'என் புருஷன் எதிலும் எப்பவும் ஏமாறமாட்டான் போதுமா!'

'அப்படி சொல்றீ என் எட்டாம்பு!'


6.இனிக்கும் இலக்கியம்

(சிங்கப்பூர் - வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி )

சங்க இலக்கியத்தை

செம்பொருள் இலக்கியம் எனலாம்

அதாவது பழையது, பண்பட்டது,

மரபுகளோடு தொடர்புடையது


புனைவியல் என்பது புதியது,

மறபுகளை மீறத்துடிப்பது,

கலைக்குள்ள விதிமுறைகளை

எதிர்க்க முயல்வது


செம்பொருள் இலக்கியத்தை

புதுமை செய்தவர்கள்

பாரதி,பாரதிதாசன்

கவிமனி போன்றவர்கள் தான்


அந்நிய தேசத்திலும்

செம்பொருள் இலக்கியத்திற்க்கு

அலங்காரம் செய்தவர்கள்

வோட்சு வொர்த், கோல்ரிட்சு,

கீட்சு, செல்லி, பைரன்,

வில்லியம் பிளேக் போன்றவர்கள்


சங்க இலக்கிய கவிஞர்கள்

இயற்க்கையோடு இயைந்து

வாழ்வு நடத்தினர்.

நிலத்தை நாண்கு வகையாகப் பிரித்து

அவ்வந்நிலத்திற்க்கேற்ப

உண்டு, உடுத்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்


ஆனால்!

இயற்கை எனும் சொல்லை

'இயல்பு' எனும் சொல்லில்

பயன்படுத்தினர்

சங்க பாடல்களில்

'இயற்கை' என்ற சொல்லே

இடம்பெறவில்லை என்று

மு.வரதராஜன் குறிப்பிடுகிறார்


சேனாவரையர் இயற்கைக்கு

'தன்னியல்பில் திரியாத நின்ற பொருள்'

என்று விலக்கம் தருகிறார்


தன்னியல்பில் திரியாதன

நிலம், நீர், தீ, வளி

என்பனவற்றைக் கூறலாம்

அதனால் தான்

ஞாயற்றின் காட்சியை

நீல மயில்மீது தோன்றும்

செவ்வேளாகக் கண்டனர்


புனைவியல் என்பது செம்பொருளியல்

என்ற இலக்கிய இயக்கியத்திற்க்கு

எதிரானது என்று கருதப்படுகிறது


நாட்டுப்பற்று, சமயம், இனம், மொழி

ஆகிய சமுதாயக் கூறுகளில்

புரட்சி காண்பது புனைவியற்

கவிஞர்களின் தலயாயப் பனையாகிறது


ஓடை, வாணம், காடு, கழனி, தென்றல்

முதலியன கண் முன் ஒரு கவிஞனுக்கு

வந்தாலும்!

முதலாளித்துவம், சுரண்டும் வர்க்கம்,

பொருளியல் கொடுமை, அறக்கருத்துக்கள்,

அறிவுரைகள், நாட்டுப்பற்று,

மொழிப்பற்று இவைகளை எழுதுவது

இயற்கைப் புனைவுகளாகும்


இதயே தனது சங்க இலக்கியத்தில்

கலைஞர்!

'வெள்ளம் போல் பொருள்

எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்

தனக்கே எலாம் எனும் தனியுடைமை

தகர்த்துத் தரித்திரத்தை

விரட்டுவதற்குத் தக்க வழிகாண

பகுத்துண்டு பல்லுயிரோம்பும்

பொதுமைக் கொள்கைய்னை

வகுத்தளித்து, வையகத்தில்

இன்பம் காண்பது தான்

வாழ்வெடுத்தப் பயனாகும்'

என்கிறார்.


பொருளியல் அநீதியை!


'பாட்டாளி வர்க்கத்தின்

உழைப்பையெல்லாம்

வெறும் கூட்டாகச் சேர்ந்து

தின்று உப்புகின்ற

கொடும் ஆதிக்க வர்க்கத்தின்

தொப்பையைப் போல்

இனியில்லை இடமென

அளவுக்கு வீங்கியது பசுவின் வயிறு!'


மேலும் ஏழைகளுக்கான அநீதியை

இப்படி விளக்குகிறார்


'இன்ப வாழ்வனைத்தும் ஒரு சாராருக்கென்றும்

துன்பம் ஒரு பிரிவினருக்குத் தொடர்நிழல் என்றும்

மனிதப் பன்பில்லாதவர்கள்

படைத்த இலக்கணம்

இந்த மண்ணுலகில் பெருங் கொடுமையன்றோ!'


என்று நெஞ்சம் வியக்கிறார்!


சங்க காலத்தை மன்னர்கள் காலம் என்றும்

இடைக்காலத்தை மதங்களின் காலம் என்றும்

இக்காலத்தை தேசிய காலம் என்றும் கூறுவர்


7.சிங்கப்பூர் சிங்டெல் நிறுவனத்தின் 3GL கைபேசிக்காக நான் எழுதிய 'டெல்' திரைக்கதை


நிமிடம் - 00:00:00 ஆரம்பம்

காட்சி-1 - நெரிசலான வாகணக் கூட்டம்

பாத்திரங்கள் - டெல் (7 வயது சிறுவன்), அபி (இளம் வயது ரோபாட்டிக்ஸ் விஞ்ஞானி)


ஒளி வெள்ளம்,

சாலை ட்ராம்கள்,

சட்டென்று எல்லா வெளிச்சமும் மங்கி சவுண்டு மியூட் ஆகிறது

இரண்டு கண்கள் மட்டும் தெரிகிறது குலோசப்-பில், அதில் கிரிஸ்டல் புண்ணகை

செதுக்கிய இமைகள்

ஒரு மரத்தின் அடியில் ஒரு பூணை பயத்தோடு பதுங்குகிறது,

வாணளாவிய கட்டிடங்கள்

அதற்கு மேல் பறக்கும் இரண்டு ஹெலிகாப்டர்கள்

அந்த ஹெலிகாப்டர் மூக்கிலிருந்து ஹெட்லைட் வெளிச்சம், 'அபி ரோபாட்டிக்ஸ் அண்டு சைபர்னாட்டிக்ஸ் லேப்ஸ்' என்கிற போர்டு

க்ளோசப்-பில் தெரிகிறது.

சட்டென்று ஹெலிகாப்டர் சப்தம் விர்ரென்று கேட்கிறது

--


காட்சி-2 - டெல் எண்ட்ரி


அந்த ரோபாட்டிக்ஸ் ரிசர்ச் ஸ்டேஷன் வெளியே டெல் நிற்கிறான்

அது ஒரு ரோடு

அவன் மட்டும் தனியாக

அடுத்த ஷாட் - அவன் எண்ட்ரன்ஸ் கேட்டில் நிற்கிறான்

பூணை கண்கள்

முழங்காலும், முகமும் மட்டும் தெரிகிறது

அந்தி வாணத்தில் சூரியன் மறைய மிக தொலைவில் கீழ் வாணம் சிகப்பாய் தெரிகிறது

கால் சட்டையும், நீல நிற பணியனும் அணிந்திருக்கிறான்

மேலே ஒரு போர்வை

கரும் நீல நிறத்தில் மெட்டாலிக் ஷு

ஐ ப்ரோவில் வரிசையாக முடி கற்றைகள்

அகலமான நெத்தி

முழங்கை முழுவதும் போர்வை மறைத்து இருக்கிறது

வலது மனிக்கட்டில் ஒரு ப்ளேட் அளவில் (வாட்ச்) டைம் மெஷின்

ஒரு சின்ன திரை கம்ப்யூட்டர் அதில் இருக்கிறது

பச்சை ரேடியம் அதில் ஒளிர்கிறது

கழுத்தில் தொங்குகிறது ஒரு டேக்

அதில் பட்டையாக ஒரு பார்கோடு

டெல், மேலும் கீழும் பார்க்கிறான்

இவனை விட 10 மடங்கு உயரமாண கண்ணாடி கதவு அது

அந்த கதவில் இருக்கிறது ஒரு சென்ஸார்

யாரோ வெளியாட்கள் என்பதால் பச்சை லைட் மறைந்து ரெட் லைட் எரிகிறது

அதன் திரையில் இருந்து 'யார் நீ' என்கிற சின்த்ரான் குரல் ஒலிக்கிறது

உடனே டெல் தனது ஆட்க்காட்டி விரலை நீட்டுகிறான்

அப்போதும் சிகப்பு எரிந்து

'உங்களுக்கு அணுமதி மறுக்கப்படுகிறது' என்கிற சின்த்ரான் குரல் கேட்கிறது

தன் கால் சட்டை பைய்யிலிருந்து ப்யூஸ் போன்ற ஒரு பொருளை எடுத்து அந்த டிவைஸ் மீது வைத்து 'பாஸ்வேர்டு' ('மறைசொல்')

என்று டைப் பண்ணுகிறான்

அது உடனே 'காத்திரு...' என்கிறது

அடுத்ததாக 'கிங் காங்' என்று வருகிறது

உடனே 'கிங் காங்' என்று டைப் பண்ணுகிறான், கதவு திறக்கிறது

--



நிமிடம் - 00:01:00 ஆரம்பம்

காட்சி-3 அபி எண்ட்ரி

பாத்திரங்கள் - டெல்,அபி


விசாலமான உள் அறையில் சுவர் முழுவதும் கம்ப்யூட்டர் ஸ்கிரீன்

அபி மட்டும் அதன் எதிரில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான்

அந்த ஸ்கிரீன் முழுவதும் 4 இலக்க எண்கள் லட்ச கணக்கில் உள்ளன

யாரோ வரும் சப்தம் கேட்டு அபி சட்டென்று திரும்புகிறான்


டெல் அப்படியே அவனை பார்க்கிறான்


டெல் : நீ தான் அபியா!

அபி : (பதறிப்போய்...) யா..யார் நீ?

டெல் : வேளைக்கு விளம்பரம் பார்த்தேன் வந்தேன்

அ பி : சரி! எப்படி வந்தாய்?

டெல் : வெளியில் வைத்திருக்கிறாயே ஒரு பாடாவதி, அதை கேட்டு விட்டு தான் வந்தேன், அது 2020 மாடல், மாத்திடு

அபி : (கோபமாக...) யார் நீ?

டெல் : டெல், 2036 மாடல், புதிய தலைமுறையை சேர்ந்தவன், கடவுளுக்கு சமமானவன்

அபி : (முகவாயை சொரிந்து கொண்டே...)...அப்ப நீ வேற ஜாதி இல்ல!

டெல் :(முகத்தை மேலும் கீழுமாக ஆட்டுகிறான், உடனே சுவர் கம்ப்யூட்டர் திரையை கவனிக்கிறான்)..என்ன...ஜாக்பாட்டா...?

அபி : ஆமாம்! எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது, நிறைய கடனாளி ஆகிவிட்டேன்

டெல் : (இப்போது காமிரா டெல் -ஐ சுற்றி வருகிறது)...'நீ அப்படி தான் ஆவாய், என்னை போன்ற ரோபோக்களால்

சிந்திக்க முடிகிறது, அட்டானமஸ் கம்ப்யூட்டர், என்னை போன்ற எத்தனையோ ரோபோக்கள் இப்போது சாப்ட்வேர் எஞ்சினியர்களாக

இருக்கின்றன, நீ பழசை வைத்துக்கொண்டு திண்டாடுகிறாய், ஒரு நாள் எல்லாமும் இஙகு திருடு போகும், நீ தெருவுக்கு வருவது நிச்சயம் அபி!'

அபி : (சிரித்துக்கொண்டே...) டெல், இந்த ஆராய்ச்சி சாலையைப் பற்றி உனக்கு தெரியாது!, இது என்னுடைய மூளை, மொத்த ரோபோ

அறிவு, நான் 4 PHD வாங்கியிருக்கிறேன், ஆனால் நீ வெத்து மெஷின்

டெல் : (தன் கால்சட்டையிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்கிறான்)

அபி : இது என்ன?

டெல் : நீயே பார்!

அபி : (வியப்போடு..) ஜீனர் டயோடு,

டெல் : உள்ளே வரும்போதெ எடுத்தது, இப்பவாவது புரியுதா?

அபி : (பேசமுடியாமல் வாயடைத்து போய் நிற்கிறான்)

டெல் : இங்கு எல்லாமும் தப்பு, உன் எலெக்ட்ரானிக்ஸ் தப்பு, நீ ஒரு உதவாக்கரை, உனக்கு எவன் டிகிரி தந்தான்



நிமிடம் - 00:02:00


அபி : (கோபமாக)சரி டெல், நீ இடத்தை காலிப்பண்ணு, இல்லை ரோபோ காப்பிடம் மாட்டுவாய், உனக்கு

வாழ்நாள் ஜெயில் உறுதி, அதிக பிரசங்கி

டெல் : அப்போது ஜாக்பாட்!

அபி : தினம் 100 டாலர் செலவழித்தால் நாண்கரை மாதங்களில் எனக்கு ஜாக்பாட் உறுதி, பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன் தெரியுமா உனக்கு,

டெல் : சரி, அபி, அது இப்போதே என்றால்?

அபி : டெல், நான் உன்னை போல் முட்டால் இயந்திரம் இல்லை, நான், உன்னை உருவாக்கிய ஆளிள் நானும் ஒருவன், எனக்கு ஜாக்பாட் மெஷினின் செக்யூரிட்டி தெரியும், வீணாக என் கோபத்தை தூண்டாமல் போ


டெல் : (அபியின் கைய்யை இழுக்கிறான், வெளியே ஓடுகிறார்கள், கண்ணாடி கதவுகள் தாணாக திறந்து வழி விடுகின்றன)



காட்சி-4 கிளைமாக்ஸ்

பாத்திரங்கள் - டெல்,அபி,போலிஸ் ஒருவர், டாக்டர் ஒருவர்


(பின்புறம் - சாலை, ஏடிஎம் மெஷின் அருகில் பெரிய அளவில் ஒரு ஜாக்பாட் மெஷின் உள்ளது, அபி தலை களைந்திருக்கிறது,டெல் அந்த ஜாக்பாட் மெஷினின் பச்சை திரையில் வேக வேகமாக தட்டுகிறான், அபி அவன் வேகத்தை பார்த்து பிரமிக்கிறான், அந்த ஜாக்பாட் மெஷினின் பச்சை திரையில் 'ஹாய் டெல்!' என்று வருகிறது, அதற்கு அடுத்த சில நொடிகளில் பச்சை திரையில் 'அல்காரிதம் செக்','ஹுயூரிஸ்டிக்ஸ் செக்','அப்ளை','டிரான்ஸ்பர்' , (டெல் சட்டென்று உன் ஐசி யை கொடு என்கிறான் - அபி தருகிறான்)


டெல் : பார்!

அபி : (நம்ப முடியாத ஜாக்பாட் டாலர்களை பார்த்ததும் அபி தனக்குள் ஏதேதோ பேசுகிறான், குழம்புகிறான்)

டெல், டெல், நீ என் செல்லம், நீ மேதை , இல்லை மாமேதை, உன்னை கடித்து, கொலை செய்து காக்காய்க்கு போட...டாய்..டாய்...டெல்..டெல்...(சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறான், தலையை களைத்துக்கொள்கிறான்)


டெல் தன் வாட்ச் போணில் எண்களை ஒத்துகிறான்,


உடனே பைத்தியக்கார ஆஸ்பத்திரி வேன் ஒன்றும், போலீஸ் வேனும் வருகிறது,


டாக்டர் : யாரப்பா இவரு?

டெல் : பய்த்தியம் போல் இருந்தது, பாவம்,அது தான் போண் பண்ணேன்


போலிஸ் : குட் ஜாப், கீப் இட் அப்!


(அந்த லொகேஷனிலிருந்து காமிரா லாங் ஷாட்டுக்கு வந்து குளோசப் பில் 'டெல் ரோபாட்டிக்ஸ் அண்டு சைபர்நாட்டிக்ஸ் லேப்ஸ்'

என்று இருக்கிறது, அதன் மேல் 'தி எண்டு' என்ற வாசகம் விழுகிறது)


நிமிடம் 00:03:00 end



8.குருவி



லிட்டில் இந்தியா, வீரமாகாளியம்மன் கோவில் பின்புறம் கூட்டமான கூட்டம், அன்று ஞாயிற்றுக்கிழமை, புக்கிட்தீமா ரோடு, சிராங்கூன் ரோடு, வீராசாமி தெரு முழுவதும் பியர் போத்தல்கள், கேரி பைகள், விஸ்கி பாட்டில்கள் இறைந்து கிடந்தன, இன்று ஒருநாள் மட்டும் இந்த ஒரு பொழுது மட்டும் குப்பைகள் போட அனுமதி அளிக்கப்படுள்ளது, காலை மூன்று மணிக்கெல்லாம் படு சுத்தமாக ரோட்டை அளம்பி விட்டு பளபளவென்று ஆக்கிவிடுவார்கள்.

தெஷ்னாமூர்த்தி நேற்று கொண்டுவந்த பார்சலை பிரித்தான், சிதம்பரம், சீர்காழி, பழையார், மகேந்திரபள்ளி, காடுமன்னார்கோயில் சாமான்களை தனிதனியாக பிரித்து பெயர் எழுதினான், தமிழ்நாட்டிலிருந்து வந்து வேலை செய்யும் அந்த ஊர்காரர்களுக்கு அவர்கள் வீடுகளிலிருந்து கொண்டுவந்த சாமன்கள் தான் அவைகள், வாராவாரம் சனி ஞாயிறு சிங்கப்பூர், பாசத்துக்கு நாலு தடவை வந்தால் தான் பிளைட் சார்ஜாவது மிஞ்சும் இல்லையென்றால் கஸ்டம்ஸ், டுயூட்டி, இமிகிரேஷன் செலவு என்று தாவு அறுத்துவிடுவார்கள்.

நான் எஸ்எம்ஆர்டி ரோடு ட்ரான்ஸ்போர்டில் சாப்ட்வேர் எங்சினியராக இருக்கிறேன், அவர் அறையில்தான் நான் தங்கியிருக்கிறேன், இருவரும் சேர்ந்து கிளம்பினேம் ஆளுக்கொரு பார்சலை தூக்கிக் கொண்டோம்.

வர்ரப்ப ஒன்னும் பிரச்சனையில்லையே?

இல்ல! போறப்பதான் பிரச்சைனை!

ஏன்? என்று கேட்டேன்.

சென்னை ஏர்போர்ட்ல இராமச்சந்திரன் ஆபிஸர் இராத்திரி பிளைட்டுக்கு நிக்கிறவரு இப்ப பகல் பிளைட்டுக்கு மாத்திட்டாங்க, அவரை விட்டா வேற யார் வருவாங்க தெரியல, நாலு ஐபோண் ஆவது கொண்டு போனா தான் டிக்கட் சார்ஜை எடுக்க முடியுது.

ஒரு தே-வோ வாங்கி இரண்டு பேரும் குடித்தோம், கையில் பார்சல்கள் கணத்தது, நிறைய பேர் சிராங்குன் ரோட்டுக் கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கினார்கள், சர்ட்,பேண்ட்,ஷூ தேவையான அனைத்தும் வாங்கிகொண்டு காக்கிபுக்கிட்டிலிருந்து வந்த கம்பெனிகாரன் மீன்பாடி வண்டியில் ஏறிக்கொண்டு சென்றார்கள், மாசக்கடைசி பணப்பற்றாக்குறை காரணமாக தெஷ்னாமூர்த்திக்கு இந்த வாரம் எப்படி இருக்கப்போகிறதோ என்று பயம் வந்தது.

ஒன்னும் பயப்படாத, முதல்ல பிச்சாவரம் பசங்கள பிடிப்போம், எவனாவது வீட்டுக்கு பணம் அனுப்பறானா பார்ப்போம், வா போலாம்,

சந்தர் ரோடு தாண்டி ரேஸ்கோர்ஸ் ரோடு போந் முத்தூஸ் கறி பக்கத்தில் உட்கார்ந்தோம், இங்கேதான் சிதம்பரத்து ஆட்கள் கூடுவார்கள்.

அண்ணே வணக்கண்ணே,

வாப்பா

உன் வீட்ல பொண்ணு பாத்துருக்காங்க, ப்ளஸ்டூ படிச்சிருக்காம், சொந்தத்துல வானம்னுட்டு பிறத்திலதான் பாக்கனும்னு சோசியகாரன் சொல்லிட்டானாம்.

எல்லாரும் நல்லாருக்காங்களா, நேத்துதான் போன் பண்ணன், வேற என்ன சொன்னாங்க.

அதிர்ஸம் குடுத்து உட்ருக்காங்க, என்று தெஷ்னாமூர்த்தி என் பக்கம் திரும்பினான், நான் அவனுக்காக கொண்டுவந்த பார்சலை எடுத்துக் கொடுத்தேன்.

பணம் எதாவது குடுக்கறது இருக்காப்பா.

நேத்துதான்னே நெட்ல அனுப்பினேன்.

இப்படி நெட்லயே எல்லாரும் அனுப்பி எம்மூட்டு வயித்தில அடிக்காதீங்க.

சரிண்ணே, சரிண்ணே! என்றான்.

அண்ணே, இங்கையே இருங்க, ஒரு போணும், கோடாலி சாப்பும் குடுக்கறன் எடுத்துட்டு போங்க, வீட்ல நான் நல்லாருக்கன்னு சொல்லுங்க,

சரி வாப்பா.

அவன் கொங்சம் நேரம் கழித்து வந்தான், ஒரு கேரிபேக் முழுவதும் சாமன்கள், தெஷ்னாமூர்த்தி கணக்கு பண்ணினான்.

ஒரு போண், ஒரு செண்டு, ஒரு பாக்ஸ் கோடாலி சாப்பு, டைகர்பாம், சொட்ரு, கைபேக், சுகர் பிஸ்கட் ஒரு டின், சாக்லேட் புட்டி அப்புறம் ஒரு லேடிஸ் வாட்சு.

என்னா போனுப்பா இது

      தண்ணியில போடலாம், டிராக்டரை வுட்டு ஏத்தலாம்ண்ணே.

      சரி, மூணு கிலோ வெயிட் வரும், இதெல்லாம் லைன் டச் அயிட்டம், ஹேண்ட் பேக் லக்கேஜ்ல தான் வைச்சிக்கனும், கூட பாத்து குட்றா தம்பி.

      அவன் எவ்வளவு வேண்டும் என்றான்.

      பத்து வெள்ளி குடுப்பா, உனக்குதான் இந்த ரேட்டு, அப்புறம் உங்க அப்பாரு ஒரு பச்ச பெல்டி வாங்கியாற சொன்னாரு, சொல்ல மறந்துட்டன்.

      குடும்ப சகிதமாக அத்தனை பெருடனும் தெஷ்னாமூர்த்திக்கு ஒரு ஈடுபாடு உண்டு,2005 வாக்கில் வெள்ளி 23 ஆக  இருந்தபோது  கல்லா களை கட்டியது, ஒரு கிராம் ஒரு வெள்ளிக்கு கிடைத்தது, 5000 ரூபாயிக்கு ஒரு பவுன் தங்க சங்கிலி, பத்து பவுன் வாங்கிப் போனால் 1000 கிடைக்கும், ஒரு யானை பாதம் நோக்கியா போண் வாங்கினால் டபுல் மடங்கு, டிரிபில் மடங்கு லாபம் பார்த்த காலம் போய்விட்டது.

      அவன் பத்து வெள்ளி தந்தான், கூடவே ஒரு கின்னஸ் ஸ்டொளட் பியர் டின் தந்து குடிக்க சொன்னான். கடைசியாக பொண்ணு போட்டாவை பாத்தியாண்ணே என்று கேட்டான்

      இல்லடா தம்பி, உனக்கு தான் போண்லயே வருமே, அதுல பாரேன் என்று அவனை பார்த்து சிரித்தான் தெஷ்னாமூர்த்தி.

      பெருமூச்சி விட்டவாரு, இந்தா செந்திலு, இன்னைக்கு பத்து வெள்ளி தான் வந்துருக்கு, என்னா பன்னப்போறன்னு தெரியல, டிக்கட் ரேட்ட ஏத்திப்புட்டானுங்க, அடிக்கடி கஸ்டம்ஸ்ல மூஞ்ச காட்றதால நாலு தடவை விட்ருவானுங்க, அஞ்சாவது தடவை எல்லாத்தையும் புடுங்கிட்டு அன்னாக்கயித்தோட வுட்ருவானுங்க.

      நான் போய் அருகில் உள்ள காந்தி ரெஸ்டாரென்டில் இரண்டு பேருக்கும் 50 செண்ட்டுக்கு சோறும், இரண்டரை வெள்ளிக்கு நண்டு கிரேவியும் வாங்கி வந்தேன்,

      கூட எதாவது வேணுமா, மீன் மண்டை

      அதல்லாம் வேணாம், வா

      அப்புறம் சீர்காழி பையன் ஒருவன் வந்தான், அவன் ஒரு ஹார்ட்டிஸ்கும், நிக்கான் காமிராவும் தந்தான்,

      குடுக்கறத குடு தம்பி, ஊர்லயே பெரிய வீடா கட்டிட்ட.சந்தோஷம்ப்பா.

      அமாண்ணே, நாப்பது லட்சம் வந்தது, மின்ன மாதிரி இப்ப ஓவர்டைம் கிடைக்கலண்ணே, இந்த 2017 க்கு சிங்கப்பூர் வேலை கஷ்டம், பஸ்ஸ கொலுத்தனுதல இருந்து சட்ட சிக்கல் ஜாஸ்தி ஆகிடிச்சி, பத்து மணிக்கு மேல தேக்கால ஒரு ஈ,காக்கா இருக்ககூடாது, கெல்லாங் சைட் எல்லாம் இப்ப நம்ப ஆளுங்க போறதில்ல, காசு இல்லாம போயிட்டுது, நம்ப ஊர்ல ஐநூறு, ஆயிரம் செல்லாதுன்னதும் எல்லாம் கேஷ்லெஸ் டிரான்ஸாக்ஷன்க்கு போயாச்சி.

      அந்த பையன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

      பதினஞ்சு வருஷமா நான் பைய தூக்கறன் செந்திலு, புதுக்கோட்டைகாரர் ஒருத்தருட்ட போய் நின்னேன், சாலாம் அலைக்கும்னு சொன்னேன், சிங்கப்பூர் வரியா, குருவி வேலைன்னார், படிப்பறிவு இல்லன்னன், படிப்பு வேணாம், நேர்மையா குடுக்கற சரக்க சேத்துடுவியான்னார், ஒத்துக்கிட்டன்.  ஃபிராடுதனம் நமக்கு தோதுப்படல, இரண்டு மூணு தடவை ஜொகூர் போய் சிகரட் காட்டன் எடுத்தாந்தன், நாலாயிரம் அய்யாயிரம் வெள்ளி ஃபைன் போட்ருவாங்கன்னு பயந்து அந்த வேலைய விட்டுட்டன்.

      இந்த வாரம் ஊருக்கு போறியா தெஷ்னாமூர்த்தி?

      கலெக்ஷன் ஆவலன்னா, மலேசியா விஸா போட்டுட்டு ஒரு நாள் இராத்திரி ஜொகூர் போய்ட்டு சிங்கப்பூர்ல என்ட்ராக வேண்டியதுதான்.

      மொத்தமாக இருநூறு வெள்ளி கமிஷனாகவும், முப்பது கிலோ பார்சலும் வந்துவிட்டது, வெள்ளியாக கொடுக்க சொல்லி வந்தது மூவாயிரம் வெள்ளி இதற்கு தனியாக கமிஷன் வந்துவிட்டது ஆக  மொத்தம் வருமானம் டிக்கட், விஸா, ரூப் வாடகை, சாப்பாடு போக ஒரு ட்ரிப்புக்கு நம்ப ஊர் காசுக்கு இருபதாயிரம் கிடைத்தது.

      திங்கள் கிழமை யார் யாருக்கெல்லாம் பணம் தரவேண்டுமே அத்தனை பேருக்கும் தெஷ்னாமூர்த்தி மணைவியிடம் கைபேசியில் சொல்லி வீட்டிலிருக்கும் பணத்தை பார்ட்டிக்கு கொடுக்க சொல்லிவிட்டான். நான் ஆபிஸ் கிளம்பினேன், மாலை வந்து ஆர்ச்சர்டு ரோடு போகலாம் என்று தெஷ்னாமூர்த்தி முஸ்தபா பக்கம் போனான்.

      நான் மாலை அறைக்கு வந்ததும் ஒருவரும் சேர்ந்து ஆர்ச்சர்டு தக்காஷிமா பில்டிங் சென்று எனக்கு எனக்கு தேவையான இரண்டு புத்தகங்களை லைப்ரரியிலிருந்து எடுத்துக்கொண்டு நேராக சிம்லிம் டவர் சென்றோம்.

      பார்ட்டிக்கு ஊரில் கொடுக்க வேண்டிய மூவாயிரம் வெள்ளிக்கும் ஏறக்குறைய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு ஐபோண் வாங்கினோம்.கடையில் வாங்கும்போதே பேட்டரி தனியாக, போண் தனியாக, சார்ஜர் தனியாக பேக செய்துகொண்டோம், போண் மேன்லை அங்கேயே போட்டுவிட்டு கிளம்பினேம்.

      அறைக்கு வந்ததும், பழைய போண்ட் ஒன்றை எடுத்து உள்ளே கார்பன் பேப்பர் வைத்து போணை சுற்றினேம். சார்ஜர் மற்றும் பேட்டரிகளை சென்னை வரும் வேறு குருவிகளுடன் கொடுத்துவிட்டு அதற்கான கமிஷனை தந்தோம்.

      இப்படி எடுத்துப்போனா மாட்னா என்ன பண்ணுவ தெஷ்னாமூர்த்தி.

      மாட்னா, இதெல்லாம் ஒன்னும் இல்லாத ஸ்கிராட்ச்னு சொல்லிட்டு கொஞ்சமா செலவு பண்ணா போதும், எதையும் பிரிக்காம எடுத்துட்டு போனா மனசாட்சியே இல்லாம ஒரு போணை எடுத்துக்கிட்டு, அஞ்சு லட்சம் பணம் கட்றயா? இல்லா காபிபோஸால உள்ள போறியான்னு கேப்பானுங்க. முதல்ல வீடியோ கேஸட் எடுத்துப்போவோம், இப்ப லாப்டாப், கைபேசி, ஐபோண், ஐபோண் தவிர மத்த எல்லாம் தான் நம்ப ஊர்லையே கிடைக்குதே, அதுவும் இல்லாம அங்கையும் இங்கையும் எதை எடுத்தாலும் சீனாகாரன் பொருள் தான். மேட் இன் ஜப்பான் பிராண்ட் எதுவும் இப்ப வர்ரதில்ல்.இப்ப நான் எடுத்துப்போற போணை மூர்மார்க்கெட்ல குடுத்துட்டு பணம் வாங்கிப்பேன், அதுக்கெல்லாம் ஏர்போர்ட்லயே ஆள் வந்து நிக்கும்.

      அன்று இரவே ஃபிளைட், பதினோறு மணி, சாங்கி ஏர்போர்ட். தெஷ்னாமூர்த்தி கைபேசினான்.

      சார், சிங்கப்பூர்லருந்து தெஷ்னாமூர்த்தி சார். இரவிக்கு பதினோரு மணி டைகர்ல வரேன் சார், டுயூட்டில தான இருக்கீங்க.

      இருக்கம்ப்பா. வா.

      செந்திலு, இராமச்சந்திரன் சார் சென்னை ஏர்போர்ட்ல இருக்கிறாரு, இமிக்ரேஷன் பிரச்சனை இருக்காது, இன்னும் யாராவது போண் குடுத்தா எடுத்துட்டுப் போயிடலாம், பாக்கலாமா?

      இன்னும் பதினைந்து ஐபோண் கிடைத்தது, தனித்தனியாக பிரித்து பார்சல் போட்டு 2017ல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எஸ்எம்ஆர்டி டாக்ஸியை மூன்று மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டு டிக்கியில் பார்சலை வைத்து கட்டினோம்.காரை எடுத்தேன்.

      தெஷ்னாமூர்த்தி மறக்காம ஏர்போர்ட்ல டேக்ஸ் ஃப்ரீ ஷாப்ல இரண்டு ஜானி வாக்கர் பாட்டில் வாங்கிட்டு போய் எங்க அப்பாட்ட குடுத்துடு என்று நான் ஐம்பது வெள்ளி கொடுத்தேன், ஆனால் தெஷ்னாமூர்த்தி வாங்கிகொள்ளவில்லை.

நீ இவ்வளவு செய்யற உனக்காக இதை செய்யமாட்டனா செந்திலு.

      சாங்கி முதலாவது டெர்மினலில் டைகர் ஏர்வேஸ் பிளைட் நின்று கொண்டிருந்த்து. லைன் கிளியறாக காத்திருந்தது. பிளைட் கிளம்பும் வரை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

      சரியாக நாண்கு மணி நேரம் காத்திருந்து, பிளைட் இன்னேரம் சென்னை சென்றிருக்கும் என்று என்ணி என் கைபேசியில் தெஷ்னாமூர்த்திக்கு போண் செய்தேன்.

      ‘இராமச்சந்திரன் கஸ்டம்ஸ் ஆபிஸரு இங்க இல்ல’ – என்று தெஷ்னாமூர்த்தி அழுதது இந்த நிமிஷம் வரை எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

--

    


      





9.விஸா

              

பி.இ படித்துவிட்டு நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கி சுவற்றில் அடித்த பந்து மாதிரி நான் திரும்பி வந்து ஒருநாள் என் ஊருக்காக செல்ல சிதம்பரம் பஸ்ஸ்டான்டில் நின்றிருந்தேன். மணி இரவு எட்டு,  தூரிக்கொண்டிருந்தது, திருச்சி  பஸ் ஒன்று என்னை கடந்துசென்றது. அதிலிருந்து இறங்கி வந்த ஒருவர், பார்க்க கருப்பாக, உயரமாக, முடி இல்லாமல், கைலி கட்டிக்கொண்டிருந்தார், வயது நாற்பது இருக்கும்

நாலாம் நம்பர் பஸ் போய்ட்டுதா தம்பி?

அதுக்குதான் நிக்கறன், இன்னும் வரல. என்றேன்.

படிக்கிறீங்களா?

இல்ல, முடிச்சிட்டன், என்எல்சில அப்ரன்டிஸ் பண்ண அப்ளை பண்ணிட்டு வரேன்.

நானும் மன்னார்குடிதான், எங்க இருக்கீங்க?

எனக்கு கொஞ்சம் அசாதரனமாக பட்டது, சம்பந்தமே இல்லாத ஒருவரிடம் என் தகவல்களை நான் சொல்வதில்லை, இதற்காகவே நான் வாட்ஸ் ஆப், பேஸ் புக் அக்கவுண்ட் கூட வைத்துக்கொள்ளவில்லை.

யூனியன் பக்கம். சொன்னேன்.

படிச்சது எலெக்ட்ரிக்கலா?

ஆமாம்,

கம்ப்யூட்டர் படிச்சிருக்கலேமே?

வேலை கிடக்காது.

கம்ப்யூட்டர் இல்லாம இப்ப எந்த வேளை நடக்குது?

எனக்கு டச் விட்டுப்போச்சு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ கம்ப்யூட்டர் படிச்சேன், எனக்கு இந்த புரோகிராம் எல்லாம் பார்த்தாவே தலை சுத்தும், பத்தாதுக்கு எனக்கு என் போண் நம்பரே மறந்துபோயிடும், கணக்கு வராது, எனக்கும் என் மேக்ஸ் புரபஸருக்கும் ஏழாம் பொருத்தம், தஸ் பிஸ்ஸுன்னு இங்கிலிஷ் பேச வராது, பிரேயர்ல ஃபர்ஸ்ட்ல நிக்கற ஆள் நான், கொஞ்சங்கூட பர்சனாலிட்டியோ உயரமோ இல்லாதவன்.

என்னை பற்றி யாரிடமும் பேசாமல் இருந்து மொத்தமாக உளறிவிட்டோமோ என்று அவரிடமிருந்து விலகி செல்ல நினைத்தேன்.

கம்ப்யூட்டருக்கு இது எதுவும் தாவையில்ல தம்பி.

வேணாம், விடுங்களேன்.

அதுக்காக இல்ல, நான் இங்க ஒரு சென்டர்ல ஒரு கோர்ஸ் சேர்ந்திருக்கன், நீயும் படியேம்ப்பா.

இப்பவே நிறைய செலவு பண்ணியாச்சுன்னு வீட்ல கவலை பட்றாங்க, எனக்கு வேணும்னா நான் சேந்துக்கறன்.

நாளைக்கு பத்து மணிக்கு நான் அந்த சென்டர்க்கு வருவேன்.

காட்டுமன்னார்கோயில் பஸ் வந்தது, இருவரும் ஏறினோம், பக்கத்து பக்கத்து சீட்தான் கிடைத்தது, ஆனாலும் நான் ஒரு வார்த்தை அவரிடம் பேசவில்லை.

அடுத்தநாள் காலையில் யோசித்துப்பார்த்தேன், அறிவுப்பூர்வமாக ஒரு முடிவு எடுத்தேன், வந்த ஆள் அந்த சென்டருக்கு ஆள் பிடிக்கிறவரா இருப்பார், அதான் இப்படி பஸ்ஸ்டாண்ட்ல் நிக்கறவர்களை கான்வாஸ் பன்றார.

அந்த சென்டரை எனக்கு தெரியும், என் பிரண்ட்ஸ் நிறைய பேர் படித்தார்கள், சி, ஜாவா என்றெல்லாம் பிஸ்து விடுவார்கள், டோபில், ஜிஆஇ எழுதிட்டு அமெரிக்கால போய் செட்டில் ஆகிறதா பீட்டர் விடிவார்கள், மாரியப்பா தியேட்டரில் போட்ட ‘தி டெர்மினல்’ படத்தை ஆறு முறை பார்த்தார்கள்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை, இப்படியெல்லாம் ஆள் சேர்க்க ஏமாத்தராங்களே என்று ஒரு தபா அந்த சென்டருக்கு போய் அங்கு அவர் இருக்கிறாரா என்ன செய்கிறார் என்று பார்த்துவிட ஆர்வமாய் இருந்தது.

சென்டர் வாசலில் மணி பத்துக்கே நின்றுவிட்டேன், அந்த ஆள் மட்டும் வரட்டும், இங்க வேலை செய்யரவரா இருந்தா தீத்துடவன் தீத்து.

வந்துவிட்டார்!.

வா தம்பி!,

இப்போது அவர் ஒரு பிளாக் கலர் பேண்டும், கட்டம் போட்ட சட்டையும் போட்டிருந்தார், எதாவது கடைக்கு கணக்கு எழுதுவார் போல, இல்ல மெக்கானிக்.

சும்மா உள்ளே சென்று பார்க்கலா என்று அவருடன் சென்றேன், லாபியில் பூச்சாடி, முருகனுக்கு மாலை, ஒரு டம்ளர் தண்ணி, அதில் ஒரு எலுமிச்சம்பழம், ஒருத்தி மட்டும் சாமி விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தாள், ஏசி இருந்தது, பத்து கம்ப்யூட்டர் போல உள்ளே இருந்தது, கண்ணாடி டோர்களில் விளம்பர போஸ்டர்கள்.

அட்மிஷனா சார்? என்றாள்

ஆமாம் என்றார், நான் தலையாட்டினேன்.

இரண்டு பேருக்கும் அட்மிஷன் ஃபார்ம் தந்தாள், நான் வாங்கிகொண்டு

‘அப்புறம் பாத்துக்களாம்’ என்றேன்.

அவர் பேசாமல் இருந்தார், அவர் பெயரை ‘அமரநாதன்’ என்று எழுதினார்.மற்ற விபரங்களை பூர்த்தி செய்துவிட்டு பணம் அட்வான்ஸ் எவ்வளவு கட்டணூம் என்றார்,

‘இப்ப பணம் கட்டவேண்டாம், பத்துநாள் கழிச்சி ஃபுல் அமெளன்டும் கட்டிடுங்க’ என்றாள்.

ஒரு பர்ஸனாலிட்டியே இல்லாத இவரே சேரும்போது எனக்கென்ன, சேர்ந்து வைப்போமே, பத்து நாள் கழிச்சி நல்லா சொல்லி தந்தா பார்ப்போம் இல்ல ஜூட் விட்ரலாம் என்று நானும் பாரத்தை ஃபுல் பண்ணினேன்.

‘இதுல கோர்ஸ் பேரை எழுதுங்க’

‘இந்த அண்ணன் சேர்ந்த கோர்ஸையே போட்டுக்கங்க’ என்றேன்

இவரை இப்போது தான் அண்ணன் என்று சொல்கிறேன்.

தினமும் அவருக்கு டீ வாங்கித் தருவேன், பதிலுக்கு அவர் பேக்கரியில் கேக் வாங்கி தருவார், ஸ்ரீதர்னு ஒருத்தர், கிளாஸ் எடுத்தார், அவருக்கு சுத்தமா அந்த சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லனனு எனக்கு தெரியருதுக்கே பத்து நாள் ஆனது, ஆனாலும் அந்த கோர்ஸ் மெட்டீரியலை படித்தால் நாம்கூட புரோகிராம் எழுதலாம் என்பதை அண்ணன் ஒரு தடவை சொன்னார்.

ஏமாத்தலாம்னு நினைச்ச ஃபீஸை கட்டினேன், என்எல்சி கணவை அந்த கம்ப்யூட்டர் பெட்டிக்குள் புதைத்துவிட்டேன், இன்டர்வியூக்காக நான் படித்து வைத்திருந்த சர்க்யூட் தியரி, மெஷின்ஸ், ஜெனரேட்டர் எல்லாம் ஒரு மாதத்தில் காலாவதியாகிவிட்டது.  புதிதாக ரெஸுயூம் பண்ண ஆரம்பித்துவிட்டேன், ஆனாலும் நான் சேர்ந்த கோர்ஸ் எனக்கு ரொம்ப அடவடியாக இருந்து வந்தது.ஒரு லைன் கமாண்ட் அடித்தால் பத்து எர்ரர் வந்தது,

அண்ணன் ஒரு தடவை சொன்னார், ‘தமிழ்ல நாம்ப பேசற வார்த்தைகள் மொத்தமே ஐம்பதுக்குள்ள தான் இருக்கும், அனால் இலட்சக் கணக்குல இருக்கு, அதேபோல தான் கம்ப்யூட்டரும், புக் முழுசா படிக்காதே, நமக்கு நம்ம அப்ளிகேஷனுக்கு என்ன தேவைன்னு பார்த்தா ஒரு பத்து கான்சப்ட்குள்ள தான் வரும், அதை மட்டும் கத்துக்க’ என்றார்.

நாணும் ஒரு பிராஜெக்டை மிகப் பிரயத்தனமாய் செய்ய தொடங்கினால், அது அது என்று ஆயிரத்தெட்டு தவறுகள்.இரண்டாவது மாத கடைசியில் ‘இது நமக்கு தோதுப்படாது’ என்று நினைக்கும்போது, சிதம்பரம் இரயில் நிலையம் கூட்டிப்போனார்,

‘இந்த ஜங்ஷனுக்கு ஒரு அப்ளிகேஷன் எழுது, அதுக்கு என்னென்ன தேவையின்னு நீயே யோசி, செய், இப்ப நாம படிக்கிற கோர்ஸ் வேல்டு ஒயிட் பாப்புலர் டேடாபேஸ் – ஆரக்கிள்!’ என்றார்.

அடுத்தநாள் கம்ப்யூட்டர் சென்டரில் கொங்சம் ஃபீல்டுகளை வைத்து ஒரு ரயில்வே டேடாபேஸ் செய்து தப்பில்லாமல் காட்டினேன், ஸ்ரீதர் சார்    ‘பென்டாஸ்டிக், நீ எங்கேயோ போகப்போற என்றார்.’

இரண்டு மாதமாக கடினமாக இருந்த புரோகிராம் ஆரக்கிள் ஃபார்ம்ஸ் அண்ட் ரிப்போர்ட்ஸ் இப்போது சுலபமாகிவிட்டது. ஆனால் இதுமட்டும் வைத்துக்கொண்டு எப்படி வேலைக்கு போவது, தெரியவில்லை.

எனக்கு கொஞ்சம் ஆரக்கிள் தெரிந்தபோதுதான் தெரிந்தது, ஸ்ரீதர் சாருக்கு நன்றாக ஆரக்கிள் தெரியுமென்று, ஏனென்றால் மனுஷன் படு ஸ்பீடாக இருந்தார், என் சந்தேகங்களை உடனுக்குடன் சரி செய்தார்.குருட்டம்போக்கில் இப்படிதான் சிலபேரை நாம் குறை கூறி அவர்களிடமிருந்து எதையும் நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம், இது தலைக்கணம் என்று புரிந்தது.

அண்ணன் இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு மூன்றாம் நாள் வந்தார், என் போண் நம்பரை கேட்டார், மெயில் ஐடி கேட்டார்,பாஸ்போர்ட் ஜெராக்ஸ் கேட்டார், யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்றேன் என்றார். தந்தேன்.

இந்த கோர்ஸ் ஆறுமாசம் நீ படி!,நான் அவசரமா ஊருக்கு கிளம்பறன்.நானே உனக்கு போண் பண்றேன், அப்ப என் நம்பரை உனக்கு தரேன் என்று சொன்னார்.

வெறுமையாக உணர்ந்தேன்.

‘சரிண்ணே!’

கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது, துடைத்துக் கொண்டேன்.

ஒரு வழியாக நாண்கு மாதம் கடந்துபோனது, அந்த இரயில்வே ஸ்டேஷனும் நாணுமாக அந்த நாண்கு மாதமும் இருந்தேன், அந்த அண்ணன் சொல்லவில்லையென்றால் எனக்கு இப்படி ஒரு ரியல் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே வந்திருக்காது.

ஒருநாள் அந்த அண்ணன் போண் செய்தார்.

தம்பி எப்படி இருக்கிற?

கிணத்துக்குள் இருந்து பேசுவதுபோல இருந்தது

நல்லாருக்கண்ணே, நீங்க நல்லாருக்கீங்களா?

இருக்கம்ப்பா, வேலை கிடைச்சதா? என்றார்.

ட்ரை பண்லண்ணே, இனிமேதான்.

பத்து ரூபாய் வைச்சிருக்கியா?

பத்து ரூபான்னா, பத்தாயிரமாண்ணே, நீங்க எங்க இருக்கீங்க?

சொல்றம்பா, நீ நேரா நம்ப லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் போய் வெறும் பத்து ரூபா கொடுத்து என் பேரை சொல்லு என்றார்.

ஜித்தா வெளியே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு பூட்டினேன். உள்ளே சென்றேன்,அங்கிருந்த ஏஜென்டிடம் அமரநாதன்னு ஒருத்தர் உங்ககிட்ட பத்து ரூபா கொடுக்க சொன்னார் என்றேன்.அவரும் வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரை நீட்டினார்.

‘இது என்ன?’ என்று திருப்பு திருப்பி பார்த்தேன். புரியவில்லை,

‘சிங்கப்பூர் விஸா தம்பி!’

‘என்ன விஸா?”

‘சோஸியல் விசிட் பாஸ், இதை வைச்சி நீ போட்டுக்கலாம், நேரா சென்னை தி.நகர், அபிபுல்லா ரோட்டுக்கு போ, அங்க சிங்கப்பூர் கான்ஸ்லேட் இருக்கு, இந்த காப்பியையும் உன் பாஸ்போர்ட்டையும் தந்தா உனக்கு மூணு மாசத்துக்கு சிங்கப்பூர் விஸா தருவாங்க, அப்புறம் வா, உனக்கு ரிடர்ன் டிக்கெட் போடணும் அது பதிமூனாயிரத்து ஐனூறு செலவாகும், இப்ப சென்னை போய்ட்டு வந்துடு’

‘சிங்கப்பூர்லருந்தா வந்துருக்கு?’

‘ம்’ என்றார்.

நான் வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னபோது, என் வீட்டு நாய்க்குட்டி கூட நம்பவில்லை, பத்தாக்குறைக்கு என் அத்தை மகள் ஒருத்தி செண்ட் பாட்டில், லிப்ஸ்டிக் என்று ஒரு லிஸ்டே கொடுத்துவிட்டு மலங்க மலங்க அழுது என் கையை எல்லாம் கட்டிகொண்டு ‘மறந்துடாத! என்று என் தோல்பட்டையை அழுத்தி கடித்துவிட்டு ‘எப்பவும் இந்த கடியை மறக்காத!’ என்று சொல்லிவிட்டுப் போனாள்.

சிங்கப்பூர் கான்ஸ்லேட்டில் என் பாஸ்போர்ட்டில் எஸ்விபி போட்டு தந்தார்கள்.இந்தியன் ஏர்வேஸ் ஐசி 555ல் ரிடர்ன் டிக்கெட் போட்டு பயணமானேன்.

கையில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அமெரிக்கன் டாலர் மாற்றிக்கொண்டேன். என் வீட்டார் அனைவரும் ஏர்போர்ட் வந்துவிட்டார்கள்.

ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மூவாயிரத்து இருநூரு கிலோமீட்டர் நாண்கு மணி நேர பயணத்திற்கு கிளம்பிவிட்டேன்,

ஆதிகாலையில் விமாணம் சாங்கி டெர்மினலில் இறங்கியது, திட்டு திட்டாக கப்பல்கள், தீவுகள். கட்டிடங்கள், தீப்பெட்டி வாகணங்கள் மத்தாப்புக்களாய் இருந்தது, சாங்கி ஏர்போர்ட் உள்ளேயே ஒரு உலகத்தை கண்டேன், உலகம் ரொம்ப சின்னதுன்றாங்க, இல்ல ரொம்பபெரிசு, பாக வேண்டியது ரொம்ப இருக்கு, வயசு பத்தாது.

ரீ-இம்பர்சன்ட் ஃபாமை வாங்கிக்கொண்டு எதுக்காக வர, ஏன் வர என்றெல்லாம் ஒரு சிங் கேட்டார், நான் அந்த அண்ணன் பெயரை சொல்லி அவர் தான் என்னை வரசொன்னார் என்று எனக்கு தெரிந்த தமிழில் மட்டும் சொன்னேன், உடனே கமிட்டி பீப்பிள் ஒரு பெண்மனி வந்தார். என்னை அழைத்து வெளியே வந்தார்.

அண்ணன் நின்றிருந்தார்.

‘வாப்பா!’

‘எண்ணன்னே நீங்க சிங்கப்பூர்ல இருக்கீங்கன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லல?’

‘இப்பதான் வந்து பார்த்துட்டல்ல’ சிரித்தார்.

டேக்ஸி பிடித்து தேக்கா வந்தோம், அந்த அலுவலகம் புக்கிட் தீமா ரோட்டில் இருந்தது.விசாலமான கெர்பா கேகே விமன்ஸ் அண்ட் சில்ட்ரன் ஹாஸ்பிடல் எதிரே இருந்தது, பெயர் பலகையில் எஸ்எம்ஆர்டி – சிங்கப்பூர் மாஸ் ராப்பிட் ட்ரான்ஸிட் என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. படித்தேன்

உள்ளே சென்றோம்.

ஒரு சீனன் அண்ணனிடம் கேட்டார்

அமர், க்ஷான்ஷெங், நி ஹோ மா

ஹென் ஹோ, சீசேங்

என்று அண்ணன் சொல்லிவிட்டு வந்தார்

‘எண்ணன்னே கேட்டார் அவர்?’

நல்லாருக்கீங்களான்னு கேட்டார், நல்லாருக்கன்னு சொன்னன்.

உள்ளே ஒரு அறையில் உட்காரவைத்துவிட்டு அரை மணி நேரம் கழிச்சி வரேன்னார்.

நானும் உட்கார்ந்திருந்தேன்.

மீண்டும் வந்து என்னை அழத்துப்போனார்.

செபஸ்டியன் ஆப்ரேஷன் மேனேஜர், சைனீஸ், சிரித்துக்கொண்டே இருந்தார், இங்கிலாந்தில் எம்பிஏ பண்ணினவர், அட்சர சுத்தமாக இங்கிலீஷ் பேசுகிறவர், மான்டரினி மொழியில் அண்ணனிடம் ஏதோ கேட்டான்.

அண்ணன் தலையசத்தார்.

செபஸ்டியன் என்னைப் பார்த்து கட்டை விரலை தூக்கி கான்பித்தார்.

அண்ணன் வெளியே என்னை கூட்டி வந்தார்,

‘நீ இந்த கம்பெனில பர்மனன்ட் எம்ப்ளாயி, இது சிங்கப்பூர் ரெயில்வேஸ், உன்க்கு க்யூ1 எம்ப்ளாயின்மென்ட் விஸா தந்துருக்காங்க, உனக்கு வேலை பூங்கோல் டூ ஹார்பர் ஃபிரண்ட் எம்ஆர்டி டிரையினுக்கு சாப்ட்வேர் மெயின்டெனன்ஸ் பன்ற வேலை, உனக்கு டிஸிக்னேஷன் ‘ஆரக்கிள் டிபிஏ’, சம்பளம் 3500 சிங்கப்பூர் வெள்ளி, டீ வேணுமா, காபி வேணுமா’ என்று கேட்டுவிட்டு காபி மெஷின் பக்கம் சென்றார்.

நான் இங்க வந்து எட்டு வருஷம் ஆகுது, பூப்புகார்ல பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிச்சிட்டு எங்க ஊர் நெடுஞ்சேரில வெத்தல பாக்கு கடை வைச்சிக்கிட்டு அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டேன், அப்புறம் அண்ணாமலையில எம்ஸியே போட்டேன், அப்புறம் கடலூர்ல ஒரு கம்பெனிக்கு வேளைக்கு போனேன், அப்புறம் பெங்களூர், அப்புறம் இங்க, எல்லாமே ஒருவித ஜிம்மிக், நம்ப எதிர்காலம் நம்ம கைக்கெட்ற தூரத்துல தான் இருக்கு, நாம தான் கையை நீட்ட மறுக்கிறோம்’

அங்க வந்து ஏன் படிச்சீங்க?

இங்க முதல்ல நான் சைபேஸ் டேடாபேஸ்ல இருந்தேன், இங்க ஆரக்கிள் படிக்க இலட்சக்கணக்குல ஆகும், அங்க வெறும் அஞ்சாயிரம் ரூபாய் தான்,எதை படிக்கிறமோ அதை நல்லா படிச்சிக்கணும், ஒரு சிலதுதான் தெரியனும், அது முழுசா தெரியணும், அதுதான் வெற்றி.

‘அண்ணே நீங்க என்ன வேலைண்ணே செய்றீங்க?’

‘இந்த ஆபிஸோட எல்லாத்துக்கும் நான் ஆப்ரேஷன் மேனேஜர்’

‘சம்பளம் எவ்வளவுண்ணே உங்களுக்கு’

‘நம்ப ஊர் காஸுக்கு எட்டு லட்சம்’

‘வருஷத்துக்கா?’

‘இல்ல மாசத்துக்கு!,
[Read More...]


Hina Softwares Earns Rs. 75,000 this month from Amazon.in



Earn this Site Monthly $5000 =Rs. 74.786 from Google Adsense
Affliate amount get from Amazon.in


[Read More...]




HINA SOFTWARES - NOW IN ABABIC  &  MALAY, MANDARINE LANGUAGES

Hina Softwares delivers accounts software, billing software, inventory software, medical software, ERP software, textiles software, school management software, college management software, hotel management software, hospital management software, MLM (netwoking) software, bulk SMS softwares, android application..
[Read More...]


 

Recent Comments

Popular Posts

Return to top of page Copyright © 2010 | Hina Softwares